பிஞ்சு வாசகர் மடல்
ஜூன் 2019 இதழிலும், ‘ஆங்கிலச் சுவை அறிவோம்’ கட்டுரையில் பக்கம் 12இல் ‘அவன் மலேசியாவில் இருந்து வந்தான்’’ என்பது, “She came from Malaysia” என்று அச்சாகியிருக்கிறது. அது“He came from Malaysia” என்றும்,
பக்கம் 27 ‘பிஞ்சு & பிஞ்சு’ பக்கத்தில், இரகுநாதத்தரை என்றிருப்பது, ‘இரகுநாதத்துரை என்றும் இருக்க வேண்டும்.
பிப்ரவரி 2019 ‘பெரியார் பிஞ்சு’ இதழில் ‘விளக்கு ஏந்திய விட்டில் பூச்சி’ என்ற தலைப்பில் கவிதை ஒன்று வெளியாகியிருந்தது. விட்டில் பூச்சி எப்படி விளக்கு ஏந்தும்? விளக்கு வெளிச்சத்தில் மோதி மாளும் என்றுதான் கேள்விப்பட்டு இருக்கிறேன். மின்மினிப் பூச்சி தான் ஒளிதரும்.
தளவை இளங்குமரன்
காலத்தைக் கணிப்பது எப்படி?
எழுதியர்: விஜயபாஸ்கர்விஜய்
கடந்த ஜூன் 2019 பெரியார் பிஞ்சு இதழில், வாட்ஸ்அப்பில் வந்திருந்த ‘காலத்தைக் கணிப்பது எப்படி?’ என்ற கட்டுரையை முகநூலில் எழுதியவர் _ தோழர் விஜயபாஸ்கர்விஜய் அவர்களாவார். முகநூல், வாட்ஸ்அப் போன்ற ஊடகங்களில் எழுதியவரின் பெயரை மறைத்துவிட்டு கருத்துகளைப் பகிரும் பழக்கத்தை விட்டொழித்து பெயருடன் பகிர்வோம்! படைப்பாளருக்குரிய மரியாதை சேர்ப்போம்! மேற்சுட்டிய கட்டுரையை எழுதியவர் யாரெனக் கண்டு சொல்ல நாம் விடுத்த வேண்டுகோளை ஏற்று சுட்டிக்காட்டிய தோழர்களுக்கும் நன்றி!
– பொறுப்பாசிரியர்.