”இந்தக் குறளுக்கு என்ன சிறப்பு?”
திடீரென்று ஒருநாள் இரவு என் மகன் உதயா ஆனந்த அதிர்ச்சி கொடுத்தான்.
“அப்பா, திருக்குறள் 40ஆவது அத்தியாயம் கல்வி! அதில் 7ஆவது குறளுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது என்ன என்று சொல்லு பார்க்கலாம்” என்றான்.
“சரி, பள்ளியில் ஏதாவது சொல்லிக் கொடுத்திருப்பார்கள். ஏதாவது நமக்கு தெரிந்த குறளாகத் தான் இருக்கும்’ என்று நினைத்து கொண்டு…
“அந்த குறள் முதல் சொல், கடைசிச் சொல் இரண்டும் சொல்லு நான் பதில் கண்டுபிடிக்கிறேன்” என்றேன்.
“முதல் சொல் ‘யாதானும்’ “கடைசிச் சொல் ‘வாறு’ “என்றான். நான் ‘பெபே’ என்று விழித்து விட்டு, “சரிடா நீயே பதில் சொல்லு” என்று கேட்டேன்.
அவன் “அந்தக் குறள்…
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு
இதன் பொருள்
நல்லா படித்தவருக்கு எந்த நாடும் அவரோட சொந்த நாடு போலத்தான்; எந்த ஊரும் அவரது சொந்த ஊர் தான்; அப்படி இருக்க சிலர் ஏன் சாகும் வரை கூட ஒழுங்காக படிக்க மாட்டேன் என்கிறார்கள்.
இதன் சிறப்பு _ இதில் ‘துணைக்கால்’ எழுத்து மொத்தம் 11 முறை வரும்” என்றான்.
“ஆகா சூப்பரர்டா உங்க மிஸ் சொல்லிக் கொடுத்தாங்களா, நல்லது” என்றேன்.
அதற்கு அவன், “இல்லப்பா free time நானே திருக்குறள் எடுத்து படிப்பேன். அப்படி இதை நானே தான் கண்டு பிடித்தேன்” என்றான்.
எனக்கு உண்மையில் மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. உடனே swiggy மூலம் ஒரு சிக்கன் பர்கர் ஆர்டர் செய்து கொடுத்தேன்.
– டி.எஸ்.கிருஷ்ணவேல்