”தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்” – ‘கால’ அட்டவணை! – 5
கே.பாண்டுரங்கன்
கடந்த இதழில் Tense பற்றிப் படித்தோம். உங்களுக்கு (சுவையுள்ளதாக) பயனுள்ளதாக இருந்திருக்கும் அல்லவா? இன்னும் நன்றாகப் புரிய வேண்டுமானால் கடந்த இதழில் சொன்னபடி அட்டவணையை உங்களுக்குக் கொடுத்துள்ளேன்.
அதில் எடுத்துக்காட்டுகளுக்கு கீழேயே அதன் தமிழாக்கம் இருக்கும். சில குறிச்சொற்கள் (Some hint words) அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் எளிதாகத் தெரிந்து கொள்ள தனித்தனி எளிய சூத்திரமும் கொடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள இந்த அட்டவணையைப் பார்த்துக்கொண்டால் உங்களுக்கு Tense பற்றிய டென்ஷன் இருக்காது… காலம் பற்றிய கவலை இருக்காது!
குறிப்பு: இங்கு ‘ing’ of verb என்று நாம் வழக்கில் குறிப்பிட்டிருப்பது present participle of verb என்பதாகும்.
…மேற்கண்ட எடுத்துக்காட்டுகள் புரிகின்றன அல்லவா?
12 காலங்கள் ஆங்கிலத்தில் எப்படி பயன்படுத்தப்படும் என்பதை நீங்கள் கடினமாகக் கற்றுக் கொள்ளாமல் இதை எளிதாக அட்டவணை மூலம் கற்றுக் கொள்வதில் மகிழ்ச்சியல்லவா?
நாம் கரும்பை அப்படியே விழுங்கி விட முடியாது.
அதை சுத்தம் செய்து, இலைகளை நீக்கி கரும்பின் தேவையில்லாத பகுதிகளை வெட்டிவிட்டு, துண்டு துண்டாக நறுக்கி, பொறுமையாக பல்லால் கடித்துச் சாப்பிட வேண்டும்தானே?
அதுபோலத்தான் ஆங்கிலத்தையும் ஒவ்வொரு துண்டாகச் சுவைக்க வேண்டும். அப்போதுதான் எளிதாக ஆங்கிலத்தை உள்வாங்க முடியும். ஒவ்வொரு துண்டாக (Each Topic) ஆங்கிலத்தை சுவைக்கத் தயார்தானே?
(தொடரும்…)
மன்னிச்சூ…
கடந்த இதழில் Tenseஇல் வரிசை எண் (11)Future Perfect Tenseக்கு தமிழாக்கமாக எதிர்காலத்தொடர் என்று பிழையாக வந்துவிட்டது!… அது எதிர்கால வினைமுற்று என்று வந்திருக்க வேண்டும். மன்னிக்கவும்! திருத்தி வாசிக்கவும்.