செய்து அசத்துவோம் : அலங்கார விளக்குக் கூடு
தேவையான பொருள்கள்:
1. உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு வண்ணத்திலான சிறிது தடிமனான செவ்வக வடிவ காகிதம்.
2. காகிதம்.
3. பென்சில்.
4. பசை.
செய்முறை:
1. முதலில் படம் 1இல் காட்டியபடி காகிதத்தின் ஓரத்தில் ஒரு சிறிய துண்டுக் காகிதத்தை வெட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
2. பிறகு படம் 3இல் காட்டியபடி அதை இடமிருந்து வலமாக மடித்துக் கொள்ளவும்.
3. பின்பு படம் 4இல் காட்டியபடி வலப்புற ஓரத்தில் பென்சிலால் ஒரு கோடு போட்டுக் கொள்ளவும்.
4. அதன் பிறகு படம் 5இல் காட்டியபடி இடமிருந்து வலமாகக் கோடுகளை வரைந்து கொண்டு, அதை கத்திரியால் வெட்டிக் கொள்ளவும்.
5. அதைப் பிரித்து, சுருட்டி படம் 6இல் உள்ளதுபோல ஓரங்களை சிறிய காகிதத் துண்டுகளால் இணைத்து ஒட்டிக் கொள்ளவும்.
6. பின்பு அதை உள்ளங்கைகளால் சிறிது அழுத்தி விட்டுக்கொள்ளவும்.
8. பிறகு, ஏற்கெனவே வெட்டித் தனியாக வைத்திருக்கும் துண்டுக் காகிதத்தை எடுத்து இரண்டு புறங்களையும் பசையால் தடவி, படம் 8இல் காட்டியபடி ஒட்டிக் கொள்ளவும்.
இப்பொழுது உங்களுக்கு அழகான ஓர் அலங்கார விளக்குக் கூடு கிடைத்துவிடும்.
பிஞ்சுகளே! செய்து அசத்துவோம் பகுதிக்கு நீங்களும் உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.