இசைப்போம் வாரீர்! – நீராருங் கடலுடுத்த.. (தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்)
இராகம்: மோகனம், மிஸ்ர தாளம்
பாடலாசிரியர்: மனோன்மணியம் பெ. சுந்தரனார்
scale: d major
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
/ரீகாகரி /ரீகா கரி /ரீகா கரி /ரீகரிபா… கா… /
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
/தப பக கரி /ரிகக ரிக /ரீகரிக /சாரிநிச /
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
/பாபபப /கபதபப /கபதபப /கபதசா… த…/
தக்க சிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
/தாசசச /பதபத த /கதபகரி / சசரிக க கதபகரிச/
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
/ரீககக / ரீககக / ரீககக / ரீகரிபா.. க.. /
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே தமிழணங்கே
/பாததத / பாததத / பாததத / பாதபசா …… / தாசதச /
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே
/த / தாசதச / தாசதச / தாசதச / காரி சரி /
வாழ்த்துதுமே வாழ்த்துதுமே
/ தாசதச / ரீகரிக… /
குறிப்பு: கீபோர்டு இசைப்பவர்களுக்கு இம் முறை பயன்படும். இசை பயில்வோர் தங்களுக்கு ஏற்ற வகையில் எப்படி வேண்டும் என்று தெரிவித்தால், அதற்கேற்ப இப் பகுதி வடிவமைக்கப்படும்.
இசைக் குறிப்பு: விஜய் பிரபு