தூக்க முடக்கம் வராமல் தடுக்க…
ஹென்றி ஃபுசெலி (Henry Fuseli) எழுதிய நைட்மேர் (1781) (Nightmare) என்னும் நாவல், தூக்க முடக்குதல் Sleep Paralysis என்னும் நோயின் சித்தரிப்பு என்று கருதப்படுகிறது. தூக்க முடக்கநோய் என்பது, தூங்கி எழுந்திருக்கும்-போது அல்லது தூங்க எத்தனிக்கும்போது, ஒரு நபர் விழிப்புடன் இருந்தாலும், அவரால் நகரவோ பேசவோ முடியாது. ஒன்றிரண்டு மணித்துளிகள் நீடிக்கும் இந்த உடல் இயற்கை நிகழ்வு, இப்படி பாதிக்கப்படுபவர்களுக்கு பெரும் பீதியை ஏற்படுத்துகிறது. இதை பேய் / கெட்ட ஆவிகளின் செயல் என பாமர மக்கள் நம்புகின்றனர். துயில் மயக்க நோய் (Narcolepsy), தூக்க மூச்சுத்திணறல் (Sleep Apnea) உள்ளவர்-களுக்கு தூக்க முடக்கம் (Sleep Paralysis) அடிக்கடி ஏற்பட்டாலும், இந்த தூக்க முடக்கம் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இதற்கு சிகிச்சை நல்ல தூங்கும் பழக்கமே!
தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்ல வேண்டும். தூங்கும் முன் காபி, தேநீர் போன்ற பானங்களைத் தவிர்க்க வேண்டும். தூங்கும்போது எதையாவது சிந்தித்துக் கொண்டே இருக்கக்கூடாது. நாம் கணினியை பணிநிறுத்தம் (shutdown)
செய்வதுபோல மூளையையும் ‘ஷட்டவுன்’ செய்ய வேண்டும்.
நல்ல தூங்கும் பழக்கம் குறித்து சில நாள்-களுக்கு முன் ஆசிரியர் தாத்தா எழுதிய வாழ்வியல் சிந்தனைகளையும் நாம் மனதில் கொண்டு, குறைந்தது தினமும் 8 மணி நேரம் தூங்கி, உடல்நலத்துடன் வாழ்வோமாக!
– மரு.த.திருநாவுக்கரசன், குற்றாலம்.