உயரம் தாண்டி வெள்ளி

காங்கயம் கார்மெல் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கோபிகா, தேசிய அளவிலான கேலோ இந்திய தடகளப் போட்டியில் கலந்துகொண்டு சாதனை படைத்துள்ளார். மஹாராஷ்டிராவில் நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் 17 வயதுக்கான பிரிவில் தமிழ்நாடு சார்பில் விளையாடி, 1.64 மீட்டர் உயரம் தாண்டி இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்திய அளவில் முதல் 12 இடங்களில் உள்ள வீரர் வீராங்கனைகளை மட்டுமே தேர்வு செய்யும் தடகளக் குழுவினர் இவரைத் தேர்வு செய்தது, தமிழ்நாட்டுக்குப் பெருமைதானே, பிஞ்சுகளே!