தெரிந்தது சூரிய கிரகணம் முறிந்தது மூடநம்பிக்கை
கடந்த 2019 டிசம்பர் 26 அன்று தமிழ்நாட்டில் மிகத் தெளிவாகத் தெரிந்த சூரிய கிரகணத்தையொட்டி, சூரிய கிரகணத்தைப் பார்க்கவும், அறிவியல் விளக்கம் அளிக்கவும், மூடநம்பிக்கைகளை ஒழிக்கவும் பெரியார் திடலில் பெரியார் பிஞ்சு இதழும், பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து “அறிவுக்கு கிரகணம் கூடாது” என்ற நிகழ்ச்சியை நடத்தின.
சூரிய கிரகணத்தின் போது சாப்பிடக் கூடாது என்ற மூடநம்பிக்கையைத் தகர்த்து, சூரிய கிரகணம் முழு அளவை எட்டியபோது, அனைவரும் காலை விருந்து உண்டனர்.
கர்ப்பிணிகள் சூரிய கிரகணத்தின் போது வெளியில் வரக் கூடாது என்ற மூடநம்பிக்கையைத் தகர்த்து, சென்னையைச் சேர்ந்த சீர்த்தி பகலவன் சூரிய கிரகணத்தை அதற்குரிய கண்ணாடி அணிந்து பார்த்து ரசித்தார். ஆசிரியர் தாத்தாவுடன் சேர்ந்து உணவும் உண்டார்.
ஊசித் துளை முறையில் சூரிய கிரகணத்தைப் பார்த்த போது…
நேரடியாக சோலார் ஃபில்டர்கள் கொண்ட கண்ணாடியை அணிந்து சூரிய கிரகணத்தைப் பார்த்து ரசித்த போது…
ஒளிப்பதிவுக் கருவியில்
(Video Camera) சூரிய ஒளியளவு குறைப்பான் (Solar Filter) பொருத்தி,
நேரடி சூரிய ஒளியைத் தவிர்த்து
பார்த்த போது