இசைப்போம் வாரீர்! – அய்யா உயிர் காத்த எங்கள் அன்னை
பாடல்: பெரியார் பேருரையாளர் அ.இறையன்
பல்லவி
அய்யா உயிர் காத்த எங்கள் அன்னை
/பதசா / சசசாச / கரிகமக… /
அகிலம் போற்றும் அன்னை மணியம்மை
/சசரிம / காரி சாரி / சசநிதச /
குறியாய் இயக்கத்தை காத்தளித்தார்
/பபப / மப பாப / தபமகம… /
பெரியார் சரியாய் தேர்ந்தெடுத்து நமக்களித்தார்
/மமம / பபபரி மா கா ரீரி / மகரிச..ச… /
(அய்யா உயிர் காத்த )
சரணம் 1
சின்னஞ் சிறுவயதில் நூல்கள் விற்றார் (2)
/பபப / மப பாப / தபமகம… /
தன்னை ஒப்படைத்து பெருமை பெற்றார்…
/பபபரி மாகாரீரி / மகரிச ச…/
(சின்னஞ்… பெருமை பெற்றார்)
அன்னை தந்தை இல்லா குழந்தைகளைக் காத்த
/ மமமரிம மா ம / ரிம மப தாபாம.. / பாப
அம்மா எங்கள் மணியம்மை
/ மாம காரி / கரி சாசா…/
(அன்னை தந்தை… எங்கள் மணியம்மை)
(அய்யா உயிர் காத்த)
சரணம் 2
இயக்கத்தின் சொத்துகளைக் காத்த அம்மை (2)
/ பபப / மப பாப / தபமகம,,, /
உயர் கல்விச் சாலை தந்த உயிர் அன்னை
/ பபபரி மாகாரீரி / மகரிச ச…./
(இயக்கத்தின்….உயிர் அன்னை)
இராவணலீலாவை நடத்தி அன்றே… (2)
/ மாமம ரிம மா ம / ரிம மப தாபாம… /
தமிழ் இனமானத் தீ வளர்த்த வீராங்கனை
/ பாப மாம காரி / கரி சாசா…./
(இராவணலீலாவை … வீராங்கனை)
(அய்யா உயிர் காத்த)
சரணம் 3
(முதலாம் சரணத்திற்குரிய சுரங்களைப் பயன்படுத்தலாம்.)
தந்தை தத்தெடுத்த கொள்கை மகன் (2)
நம் அன்னை வளர்ந்தெடுத்த வீரமகன்
அய்யா அம்மா பணி முடித்திடுவார் இனி
என்றும் நம் தலைவர் வீரமணி
அய்யா அம்மா பணி முடித்திடுவார் இனி
என்றும் நம் தலைவர் வீரமணி
(அய்யா உயிர் காத்த)
ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…
/சரிகம மா..கா..ரீ..சா…தச…/
குறிப்பு: கீபோர்டு இசைப்பவர்களுக்கு இம் முறை பயன்படும். இசை பயில்வோர் தங்களுக்கு ஏற்ற வகையில் எப்படி வேண்டும் என்று தெரிவித்தால், அதற்கேற்ப இப்பகுதி வடிவமைக்கப்படும்.
இசைக் குறிப்பு: விஜய் பிரபு