இலவசக் காற்று
இத்தாலியைச் சேர்ந்த 93 வயதான ஒருவர், கோவிட்-19-ல் இருந்து மீண்ட பிறகு, மருத்துவ மனையிலிருந்து வெளியேறும் நேரத்தில் ஒரு நாள் வென்டிலேட்டர் பயன்பாட்டிற்கு பணம் செலுத்து மாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். அந்த தொகையைச் சொன்னதும், உடனே அந்தப் பெரியவர் அழ ஆரம்பித்தாராம். டாக்டர்கள் அவரை அழக்கூடாது என்றும், பில் செலுத்த முடியாவிட்டால், கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
அந்த வயதானவர், “இல்லை, நான் செலுத்த வேண்டிய பணத்தின் காரணமாக நான் அழவில்லை. எல்லா பணத்தையும் என்னால் செலுத்த முடியும். 93 ஆண்டுகளாக நான் இயற்கையின் காற்றை சுவாசித்துக் கொண்டிருக் கிறேன். ஆனால் நான் அதற்கு ஒருபோதும் பணம் கொடுக்கவில்லை. ஒரு நாளில் ஒரு மருத்துவ மனையில் வென்டிலேட்டரைப் பயன்படுத்த இத்தனை டாலர்கள் என்றால், நான் இயற்கைக்கு எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது! இத்தனை ஆண்டுகளாக நான் இயற்கைக்கு ஒருபோதும் நன்றி சொல்லவில்லை” என்றாராம்.
அவரது சொற்கள் மருத்துவர்களைச் சிந்திக்க வைத்தன. ஆகவே, நாம் உயிருடன் ஆரோக் கியமாக இருக்கும்போது ஒவ்வொரு கணமும் இலவசக் காற்றைச் சுவாசிக்க அனுமதித்ததற்காக இயற்கைக்கு எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். அதனிடம் நன்றி காட்டுதல் என்பது இயற்கையைச் சீரழிக்காமல் பாதுகாப்பதுதான்.”
வாட்ஸ் அப்பில் வந்த இந்த தகவல் உண்மையா இல்லையா தெரியாது. ஆனால், இதில் இருக்கும் உணர்வு உண்மையானது. காற்றை எந்தக் கட்டணமும் இல்லாமல் நுகர்ந்து வரும் நாம், அதே வாய்ப்பை அடுத்த தலைமுறைக்கும் தர வேண்டும் அல்லவா? காற்று மாசுபடுவதைத் தவிர்ப்போம்! மரம் வளர்ப்போம்! இயற்கையை காப்போம்!”<