தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் – மூன்று வகை இணைப்புச்சொற்கள் [ 3 TYPES OF CONJUCTION]
கே.பாண்டுரங்கன்
நல்லதோ, கெட்டதோ -இந்த உலகத்தில் இணைப்பு [Link/Junction] இல்லாமல் ஒன்று நடக்குமா?
இணையங்கள் வந்த பிறகு, மக்கள் இணைந்து பேச, பழக, இணைந்து போராட, என்று Facebook, Whatsapp, Twitter உட்பட பல தளங்களில் இணைய முடிகிறது – செயல்பட முடிகிறது.
இணைப்பு என்னென்ன செய்கிறது பாருங்கள்…
கையில் கிருமி [Virus] இணைந்தால் [கொரோனா] நோய் [Disease].
நாக்கில் உணவு [Food] இணைந்தால் சுவை [Taste].
வாக்கில் உண்மை இணைந்தால் பெருமை.
அறிவில் உண்மை இணைந்தால் தெளிவு.
அந்த அறிவுக்கு சிறந்த படிப்பு என்னும் இணைப்பு இருந்தால்… வளர்ச்சி.
வளர்ச்சி இருந்தால் மகிழ்ச்சி!
பாருங்கள்… ஏடுகளில் உள்ள எழுத்துகள் கூட… ஏதோ ஓர் அச்சு [Print], காகிதத்துடன் [Paper] இணைந்து இந்த எழுத்துகளையும் [Letters], சொற்றொடர்களையும் [Sentence] உருவாக்கு-கிறதல்லவா?
எனவே, இணைப்பு [Link/Junction] எல்லா இடத்திலும் தேவை தானே! இணைப்புச் சொல்லும் [Conjunction] அப்படித்தான்!
மனிதனை மனிதன் புரிந்துகொள்ளத்தான் மொழி!
எந்த மொழியிலும், அது தமிழோ ஆங்கிலமோ… அல்லது வேறு எந்த மொழியென்றாலும், அங்கு சொல்லும் [WORD] வேண்டும்; சொற்றொடரும் [SENTENCE] வேண்டும்.
ஆயினும்,
சொல்லும், சொற்றொடரும் [WORD AND SENTENCE] மட்டும் போதாது, அவை இணைந்து பல சொற்றொடர்களை [MORE SENTENCES] உருவாக்க வேண்டும் அல்லவா?
அப்படி உருவாக்குவதுதானே பத்திகளும் (PARAGRAPHS), புத்தகங்களும் (BOOKS) நல்ல புத்திகளும் (GOOD THOUGHTS).
அவ்வாறு சொல்லும் சொல்லும், சொற்றொடரும் சொற்றொடரும் இணைவதற்குத் தேவையான சொல்தான் இணைப்புச்சொல் [Conjunction].
இணைப்புச்சொற்கள் வகை மூன்று அல்லவா?
அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
முதலில்…
1) Coordinating Conjunctions [ஒத்துழைப்பு இணைப்புச்சொற்கள்]
ஒத்துழைப்பு என்றால் உங்களுக்கு தெரியுமல்லவா? ஏற்றுக்கொண்டு உதவுவது.
[மேலே உள்ள பெட்டிகளைப் பாருங்கள். இணைப்புச்சொல் இரண்டு
சொல் அல்லது சொற்றொடருக்கு ஒத்துழைக்கிறது [coordinating]]
இங்கே இரண்டு சொற்களை எடுத்துக்-கொள்வோம்.
இரண்டும் தனித்தனி சொற்கள்
‘அறிவரசன்’, ‘இளவரசன்’
இந்த இரு [Words] சொற்களுக்கிடையே ஒரு இணைப்புச்சொல் [Conjunction] போட்டால் என்ன போடலாம்?
ஒத்துவரும் இணைப்புச்சொல் ஒன்று தேவை.
ம்ம்!… “மற்றும்”, போடலாமல்லவா?
அறிவரசன் மற்றும் இளவரசன் (அறிவரசனும் இளவரசனும்)
ஆங்கிலத்தில்…
ARIVARASAN and ILAVARASAN
ஆனால் – பெரும்பாலும், சொற்றொடர்களை [Sentence] வைத்து சொன்னால்தான் சரியாக இருக்கும்.
அறிவரசு மற்றும் இளவரசு [அறிவரசும் இளவரசும்] ஒரு மகிழுந்து மூலம் திருச்சிக்குச் சென்றார்கள்.
ARIVARASAN and ILAVARASAN travelled by a Car to Trichy.
மேலே சொன்னது ஏற்கெனவே [போன இதழில்] சொன்னது போன்ற ஒரு சிறிய எடுத்துக்காட்டு மட்டுமே.
[Coordinating Conjunction] ஒத்துழைப்பு இணைப்புச் சொற்கள் ஆறு மட்டுமே..! மிக மிகச் சுலபமாக நினைவில் வைத்துக் கொள்ளலாம்.
எப்படி?
ஆங்கிலத்தில் சுருக்கு முறை [SHORT FORM] ஒன்று உண்டு..
அதன்படி, ஒத்துழைப்பு இணைப்புச்சொற்களை FANBOYS என்பார்கள்.
FANBOYS = FOR, AND, NOR, BUT, OR, YET, SO
F = FOR [காரணத்திற்காக] [Because என்னும் பொருளில்]
A = AND [மேலும் / மற்றும்]
N = NOR [அதுவும் இல்லை/ அதுவும் கிடையாது]
B = BUT [ஆனால்]
O = OR [அல்லது / இல்லாவிட்டால்]
Y = YET [ஆயினும் / இன்னும்]
S = SO [எனவே]
ஏழு ஒத்துழைப்பு இணைப்புச்சொற்களுக்கும். ஏழு எடுத்துக்காட்டுகள் காண்போம்.
ANNAI MANIAMMAIYAR is/was loved for she had done the remarkable Social Service.
அன்னை மணியம்மையார் அவருடைய மகத்தான சமூக சேவை காரணமாக மக்களால் விரும்பப்பட்டார்.
I like tea AND coffee.
எனக்குத் தேநீரும், காபியும் பிடிக்கும்
Neither my parents nor my friends discouraged me.
என்னை என் பெற்றோரும் ஊக்கமிழக்கச் செய்ததில்லை. என் நண்பர்களும் செய்ததில்லை,
Helping mentality is good, but take care of you.
உதவும் மனப்பாங்கு நல்லதுதான், ஆனால் உங்களையும் கவனித்துக்கொள்ளுங்கள்.
Improve your Immunity power, or you will be sick soon.
உங்களின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள், அல்லது நீங்கள் விரைவில் நோயாளியாகிவிடுவீர்கள்.
PERIYAR’s principles guide that ‘we are defeated, Yet we will definitely win’.
‘நாம் தோற்கடிக்கப்படுகிறோம், [ஆயினும்] இன்னும் வெற்றி பெறுவோம்’ என்று பெரியாரின் கொள்கைகள் நமக்கு வழிகாட்டுகின்றன.
I don’t drink cold water, so I don’t get sinus problem [cold]
நான் குளிர்ந்த நீரை அருந்துவதில்லை, எனவே, எனக்கு சளிப்பிரச்சினை இல்லை.
(மீண்டும் இணைவோம்)