செய்து அசத்துவோம் – அழகிய ராக்கெட்!
வாசன்
1. ஓர் அடி நீளமுள்ள தடிஅட்டையிலான ஓர் உருளை.
2. உங்களுக்குப் பிடித்தமான வண்ணத்தில் உருளையில் ஒட்டுவதற்கு ஒரு காகிதம்.
3. செவ்வக வடிவ சற்று தடிமனான ஏதாவதொரு வண்ணத்திலான அட்டை ஒன்று.
4. சிறிது தடிமனான ஓர் அட்டை
5. பரிசுப் பொருட்களைச் சுற்றும் காகிதம் (Gift Wrapper) ஒன்று
6. கத்தி (Cutter) – (கவனமாகக் கையாள வேண்டும். பெரியோரின் உதவியை நாடுவது நல்லது)
7. பசை
8. கருப்பு வண்ண ஸ்கேட்ச் பேனா
செய்முறை:
1. முதலில் உருளையை எடுத்து அதில் வண்ணக் காகிதத்தை பசை கொண்டு ஒட்டிக் கொள்ளவும்.
2. பிறகு செவ்வக வடிவத் தடிமனான அட்டையை எடுத்து அதில் இரண்டு வட்ட வடிவத்தை வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
3. பின்பு படம் 3-ல் காட்டியபடி இரண்டு வட்ட வடிவத்தில், படத்தில் காட்டிய கோடிட்ட இடத்தை (கீழ் பாகத்தை) வெட்டி எறிந்து விடவும்.
4. இப்பொழுது படம் – 4-ல் உள்ளது போல பிறை வடிவம் கிடைத்துவிடும்.
5. பிறகு சிறிது தடிமனான அட்டையை எடுத்து கூம்பு வடிவத்தைச் செய்து கொள்ளவும்.
6. பின்பு பரிசுப்பொருள் சுற்றும் காகிதத்தை எடுத்து, கூம்பு வடிவத்தில் ஒட்டிக் கொள்ளவும்.
7. இப்பொழுது உருளை வடிவத்தை எடுத்து, படம் 7-ல் காட்டியபடி அடிப்பாகத்தில் 2 இன்ச் அளவிற்கு நான்கு புறங்களில் (எதிர், எதிர் பக்கங்களில்) கட்டரின் உதவியால் வெட்டிவிட்டுக் கொள்ளவும்.
8. இப்பொழுது வெட்டி வைத்த வட்ட வடிவத்தை எடுத்து, அதில் ஒன்றை சரிபாதியாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
9. பின்பு உருளையை எடுத்து, கையில் பிடித்துக் கொண்டு, வெட்டி வைத்த வட்ட வடிவத்தை (வெட்டாத பாகம்) உருளையின் அடியில் வெட்டி விடப்பட்ட இடையில் சொருகவும். (படம் 9)
10. பிறகு இரண்டாக வெட்டிய வட்டவடிவ பாகத்தை எடுத்து, உருளை மற்ற இரு பக்கத்திலும், பக்கத்திற்கு ஒன்றாக (படம் 10) சொருகிக் கொள்ளவும்.
11. பின்பு கூம்பு வடிவத்தை எடுத்து உருளையின் மேல் பாகத்தில் பசையைத் தடவி அதில் மேலே வைத்து விடவும். (படம் 11)
இப்பொழுது உங்களுக்கு அருமையான ராக்கெட் கிடைத்துவிடும். அதில் ஸ்கெட்ச் பேனாவின் உதவியோடு சாளரங்கள் வரைந்து கொள்ளவும். <