நம் கடமை!
தொற்று நோய்தான் வந்திட்டால்
தூர ஒதுங்கி இருந்திடுக:
மற்ற வர்க்குப் பரவாமல்
மாய்த்தே அழித்தல் நம்கடமை!
சுற்றுப் புறத்துச் சூழலையே
சுத்த மாக வைத்திடுவோம்;
முற்றாய் நோயின் கிருமிகளை
முதலில் ஒழித்தல் நம்கடமை!
உடலின் சுத்தம் உயர்வாகும்:
உயிர்க்கொல் லிக்கே எதிராகும்:
திடமாய் வாழச் சத்துணவைத்
தினமும் உண்ணல் நம்கடமை!
எதிர்ப்புச் சக்தி உருவாக
என்றும் உண்க கறி-காய்கள்*
அதிக மாகக் குடிநீரை
அருந்தி வாழ்தல் நம்கடமை!
பெருநோய் ஏதும் வாராமல்
பெரிதாய் முயல்தல் நம்கடமை:
வருமுன் காத்தல் நம்கடமை:
வாழ்வை உயர்த்தல் நம்கடமை!
– கே.பி.பத்மநாபன், கோவை.
*இங்கு ‘கறி-காய்கள்’ என்பது உண்ணக்கூடிய அனைத்துவகை மாமிச உணவையும், காய், கனி வகைகளையும் குறிக்கிறது.