செய்து அசத்துவோம் : அழகிய வண்டு
வாசன்
தேவையான பொருட்கள்:
1. சதுர வடிவ, சிறிது தடிமனான சிவப்பு நிறக் காகிதம். 2 கருப்பு நிற ஸ்கெட்ச்பென்
செய்யும் முறை:
1. முதலில் சிவப்பு நிறத் தாளை திருப்பி வைத்துக் கொள்ளவும். பிறகு அதை சரிபாதியாக மடித்துக் கொள்ளவும்.
2. மடிக்கப்பட்ட தாளை படம் 2–இல் காட்டியபடி கோடிட்ட இடங்களை மேலிருந்து கீழாக மடிக்கவும்.
3. மடித்த பாகத்தை திருப்பிக் கொள்ளவும்.
4. திருப்பிய தாளை படம் 4-இல் காட்டியுள்ளதைப் போல கோடிட்ட இடத்தை கீழ்ப்புறமாக மடிக்கவும்.
5. மடித்த பாகத்தை படம் 5-இல் காட்டியபடி கோடிட்ட இடத்தை மேல்புறமாக மடிக்கவும்.
6. மேல்புறமாக மடித்த பின்பு காகிதத்தை திருப்பி கொள்ளவும்
7. இப்பொழுது உங்களுக்கு அழகிய சிவப்பு வண்டு ரெடி. பிறகு நீங்கள் அதன் இறக்கையில் ஸ்கெட்ச் பென் உதவியுடன் புள்ளிகளை (வட்ட வடிவில்) வைக்கவும்.
செய்து அசத்துங்கள்! வாழ்த்துகள்!