செய்து அசத்துவோம் : நீரில் மிதக்கும் ஊசி
வாசன்
தேவையான பொருள்கள்:
1. ஒரு கண்ணாடிக் குவளை (Glass Tumbler)
2. ஒரு மெல்லிழைத் தாள் (Tissue Paper)
3. ஓர் ஊசி
1. கண்ணாடிக் குவளையில் முக்கால் பாகத்திற்கு நீரை நிரப்பவும். அதில் ஊசியைப் போட்டு மிதக்க வைக்கமுடியுமா? என்று உங்கள் நண்பர்களிடம் சவால் விடவும். அவர்கள், “ஊசியைத் தண்ணீரில் போட்டால் ஊசி கீழே அமிழ்ந்து விடும்.’’
2. உடனே நீங்கள் “நான் ஊசியை மிதக்க வைக்கிறேன்’’ என்று கூறிவிட்டு அதில் சிறிய மெல்லிழைத்தாள் (Tissue Paper) துண்டை போடவும்.
3. பிறகு அதன்மீது ஊசியை வைக்கவும்.
4. சிறிது நேரத்தில் மெல்லிழைத்தாள் நீரில் நனையும்.
5. நனைந்த டிஸ்யூ பேப்பர் தண்ணீரில் மூழ்கும்.
6. இப்பொழுது ஊசி மட்டும் மிதக்கும். இதைப் பார்த்து நண்பர்கள் வியப்பில் மூழ்குவர்.
அறிவியல் உண்மை :
நீரில் மிதக்கும் மெல்லிழைத்தாள் நீரில் நனைவதால் அடர்த்தி அதிகமாகி, அதன் காரணமாக நீருக்குள் மூழ்கிவிடும். ஆனால் அதன் மீது வைக்கப்பட்ட ஊசி நீரின் பரப்பு இழுப்பு விசையின் காரணமாக நீரில் மூழ்காமல் மிதக்கும். இது ஓர் அறிவியல் உண்மை!
செய்து அசத்துங்கள்! வாழ்த்துகள்!