• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

அனுபவ அறிவு : மெழுகுவத்தி உற்பத்தி பயன்பாடு தெரியுமா?

2021_may_m27
அறிவியல்மே 2021

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்குப் பதிவு முடிந்து ஓட்டுப் பெட்டிக்கு ‘சீல்’ வைக்கும் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்… சுமார் 89000 வாக்குச் சாவடிகள் _ -சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை…

எல்லா வாக்குச் சாவடிகளிலும்  மெழுகுவத்தியைத்தான் ஏற்றி ‘சீல்’ வைத்துக் கொண்டிருந்திருப்பார்கள்… அரக்கைச் சூடு செய்து அதன் மீது முத்திரையைப் பொறிப்பதுதான் சீல் (seal) வைத்தல் என்பது. அதைப்பற்றி பிறகொருமுறை பார்ப்போம். தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இந்த மெழுகுவத்திகளெல்லாம் தயார் செய்யப்பட்டது சொல்கேளான் என்ற தாத்தாவால்! அவர் சொந்தமாக உழைத்து மெழுகுவத்தி நிறுவனம் வைத்திருக்கிறார். மின்சாரம் துண்டிக்கப்படும் இந்தக் கோடையில் மெழுகுவத்தியின் பயனை நாம் அறிவோம். ஆனால், மெழுகுவத்தியின் பின்னால் இருக்கும் செய்திகளை சொல்கேளான் தாத்தா சொல்லக் கேட்போமா?

“மெழுகுவத்தி பற்றி பிஞ்சுகள் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு மெழுகுவத்தி நன்றாக எரிய வேண்டுமானால்,

மெழுகின் தரம் நன்றாக இருக்க வேண்டும்.

நூல் நடுவில் இருக்க வேண்டும். காற்று இருக்கக் கூடாது. அடிப்புறம் சம தளத்தில் அமைந்திருக்க வேண்டும். மூக்கு உறுதியாக இருக்க வேண்டும். இப்படி பல டெக்னிக்குகள் … சரி, மெழுகு பற்றி பார்ப்போம்…

கச்சா எண்ணெயில் (குரூட் ஆயிலில்) இருந்து எண்ணெய் சுத்திகரிப்பாலையில் பல பெட்ரோலியப் பொருள்கள் -_ பெட்ரோல், -டீசல், – மண்ணெண்ணெய் -போன்ற 20 வகையான  பல பொருள்களைப் பிரித்த பின் இறுதியாக வருவதுதான் பாரபின் மெழுகு… இதற்கு அடுத்து வருவது தார்…

இந்தியாவின் முதல் எண்ணெய் சுத்திகரிப்பாலை அசாமில் உள்ள டிக்பாய் என்னும் இடத்தில் உள்ள அய்.ஓ.சி. (இந்தியன் ஆயில் கார்ப்பரேசன்) ஆலை….(“வெள்ளைக்காரர்கள் அங்குள்ள தொழிலாளர்களை தோண்டுங்கள்… தோண்டுங்கள்…’’) டிக் பாய்… டிக் பாய் என்று சொல்லியே டிக்பாய் என்று பெயர் வந்ததாக வரலாறு)

சரி, மெழுகுவத்தியை நீங்கள் சாதாரணமாக நினைக்கலாம். ஆனால், அது எத்தனை வகையான பொருள்களுக்குத் தேவைப்படுகிறது என்பது அதிகம் பேருக்குத் தெரியாது. சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்.

பாரபின் மெழுகு இல்லாவிட்டால்… –

தீக்குச்சி தயாரிக்க முடியாது,

லெதர் கோட்டிங் செய்ய முடியாது,

தார்பாலின் செய்ய முடியாது,

பேப்பர் கோட்டிங் செய்ய முடியாது. (பிரிட்டானியா பிஸ்கட்டில் உள்ளே நமத்துப் போகாமல் இருக்க ஒரு லேயர் கோட்டிங் இருக்கும்…)

டீ கப், ஜுஸ் கப், ஆப்பிள் இவற்றில் எல்லாம் மெழுகு கோட்டிங்தான்.

மரவேலை செய்யும் தச்சர்களுக்கு மக்கு பார்ப்பதற்கு மெழுகுதான்…

தரைதளம் டைல்ஸ் மீது கோட்டிங் கொடுப்பதற்கு மெழுகுதான்…

நீங்கள் போடும் ஷூ பாலிஷ் மெழுகுதான்…

தலைவலிக்கு நீங்கள் போடும் ஜண்டு பாம், விக்ஸ், அமிர்தாஞ்சன் மெழுகுதான்…

5 ரூபாய்க்கு நீங்கள் பால் பாயின்ட் பேனா வாங்கினால் அதன் முனையில் கடுகு அளவு ‘சீலிங்’ இருக்கும்… அதுவும் மெழுகுதான்….

இன்னும் இப்படி பல தொழில்களுக்குத் தேவைப்படுவதுதான் மெழுகு…

சிறப்பு என்னவென்றால்… இன்னும் உலகப் புகழ்பெற்றவர்களின் உருவச் சிலைகளை ‘தத்ரூப’மாக மெழுகில் வடித்துள்ளதையும் அறிந்திருப்பீர்கள்.

அதனால்தான் எப்போதும் மெழுகுக்கு வெளி மார்க்கெட்டில் அதிக டிமாண்ட்….

1972இல் நாங்கள் கம்பெனி ஆரம்பிக்கும்போது ஒரு கிலோ மெழுகு ரூபாய் 1.25. இன்றைக்கு  … ரூ.100.- வெளிச்சந்தையில் ரூ.105.- இந்த வாரம் இன்னும் டன்னுக்கு பத்தாயிரம் ஏறும் என்று சொல்கிறார்கள்…

தேர்தல் டென்டர் எடுத்து ‘சப்ளை’ செய்த பின் டன்னுக்கு ரூ.10,000 ஏறியிருக்கிறது… நல்லது. நாங்கள் அதற்குள் மெழுகு வாங்கி விட்டோம்…

எங்கள் கோவில்பட்டி மாப்பிள்ளை சொன்னார்.  “ஓடப்பட்டி பிள்ளையாரால்தான் தேர்தல் ஆர்டர் வந்தது… விலை ஏறுவதற்குள் மெழுகு வாங்கி விட்டீர்கள்.. வந்து பிள்ளையாருக்கு ஒரு பூஜை செய்யுங்கள்’’ என்று.

“பெட்ரோல் விலை மாதிரி மெழுகு விலையும் ஏறுகிறது.. இதற்கு எதற்கு பிள்ளையாருக்கு பூஜை? என்று கேட்டேன் நான்” என்கிறார் சொல்கேளான் தாத்தா.<

21
குறுக்கெழுத்துப் போட்டிகுறுக்கெழுத்துப் போட்டி6th May 2021
எண்ணிப்பார் எட்டு வேறுபாடு6th May 2021எண்ணிப்பார் எட்டு வேறுபாடு

மற்ற படைப்புகள்

1
அறிவியல்ஜூலை 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
2nd July 2025 by Periyar Pinju

கொண்டைலாத்தி

Read More
26
அறிவியல்ஜுன் 2024பிஞ்சு 2024
5th June 2024 by ஆசிரியர்

வலையில் வந்தது

Read More
23
அறிவியல்ஆகஸ்ட் 2023பிஞ்சு 2023
4th August 2023 by ஆசிரியர்

சப்பாத்தி மீன்

Read More
2022_dec_13
அறிவியல்டிசம்பர் 2022
5th December 2022 by ஆசிரியர்

விண்ணியல்

Read More
2020_mar_v51
அறிவியல்பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2020
27th February 2020 by ஆசிரியர்

செய்து அசத்துவோம் : தீப்பெட்டி பம்பரம்

Read More
அறிவியல்நவம்பர் 2022
9th November 2022 by ஆசிரியர்

அசத்தும் அறிவியல்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p