குறுக்கெழுத்துப் போட்டு
கேள்விகள்
இடமிருந்து வலம்:
1. செப்–17 பகுத்தறிவுப் பகலவன் ____ பிறந்த நாள்.(7)
4. கோலி —-____ ஒரு தமிழ் திரைப்படம் [திரும்பியுள்ளது] (2)
6. விடுதலை ஒரு நாள் ____ [திரும்பியுள்ளது] (3)
9. FAN-தமிழில் மின் ____ (3)
11. ____ ஓட்டிய தமிழன் வ.உ.சி. [திரும்பியுள்ளது](4)
12. புல்லின் நுனியில் ____த் துளி. [திரும்பியுள்ளது](2)
14. அலைபேசி கோபுரம் ஆங்கிலத்தில் _ செல்போன் ____ (3)
16. அங்காடி _ வேறுசொல் ____ (2)
17. கல்வி வள்ளல் காமராசர் பிறந்த ஊர் ____ (இன்று இவ்வாறு அழைக்கப்படுகிறது).(6) [திரும்பியுள்ளது]
மேலிலிருந்து கீழ்
1. “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத ____ என்று சங்கே முழங்கு.’’ – புரட்சிக் கவிஞர்.
2. மரம் வெட்டப் பயன்படும் கருவி ____ [திரும்பியுள்ளது]
3. சமையலுக்குப் பயன்படும் ____ சாஸ். (ஷிணீuநீமீ)
5. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கற்றுத் தந்த ____ அண்ணா பிறந்த நாள் செப் -15 (5)
7. “ஊன்றி வரும் ____ சற்று நடுங்கக்கூடும் உள்ளத்தின் உரத்தினிலே நடுக்கம் இல்லை’’ -அவர்தாம் பெரியார். (2)
8. குப்பை கூட்டப் பயன்படுவது ____ [திரும்பியுள்ளது] (5)
9. தெனாலிராமன் ஒரு ____ (5)
10. அண்மையில் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் கேப்டன் ____(2)
13. இரவு_எதிர்ச்சொல் [கலைந்துள்ளது] (3)
15. காக்கை தூக்கிச் சென்றது பாட்டி சுட்ட ____(2)
– பெரியார்குமார், இராசபாளையம்
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை
செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ,
9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ,
பெரியார் பிஞ்சு முகவரிக்கோ அனுப்பலாம்.
பரிசுகளை வெல்லலாம்!