நேர்பட ஒழுகு

பரிவுடன் பெரியார் பகிர்ந்தவை
யாவும் பகுத்தறி தம்பிநீ என்றும்!!
பெரியவர் சொல்லும் பிரித்துநீ
ஆய்ந்தே பிழையது சரியெது காண்க!!
சரியெனக் கண்டால் சளைத்திட வேண்டாம் தகுவழி யதுவெனச் செல்க!
பெரிதென வேண்டாம்
பிழையுறு வாழ்க்கை;
பிறர்நலம் போற்றுவாய் கண்ணே!!
– சுப.முருகானந்தம், மதுரை.