பிஞ்சு எழுதிய பாடல்: எதுக்கு எதுக்கு அதுக்கு அதுக்கு
எதுக்குக் குளிக்கணும் எதுக்குக் குளிக்கணும்?
குளிச்சாத்தான் அழுக்குப் போகும்.
எதுக்கு அழுக்குப் போகணும் எதுக்கு அழுக்குப் போகணும்
அழுக்கு போனால்தான் கிருமி போகும்.
எதுக்கு கிருமி போகணும், எதுக்கு கிருமி போகணும்
கிருமி போனால் தான் நோய் வராது.
எதுக்கு நோய் வரக்கூடாது எதுக்கு நோய் வரக்கூடாது?
நோய் இல்லேனாத்தான் உடல் பலமா இருக்கும்.
எதுக்கு உடல் பலமாயிருக்கனும் எதுக்கு உடல் பலமாயிருக்கணும்?
உடல் பலமானாத்தான் ஜெயிக்கமுடியும்
எதுக்கு ஜெயிக்கணும் எதுக்கு ஜெயிக்கணும்
ஜெயிச்சாத்தான் முதல்வனாக முடியும்
எதுக்கு முதல்வனாகணும் எதுக்கு முதல்வனாகணும்?
முதல்வானானாத்தான் எல்லோரையும் பாதுகாக்க முடியும்.
– ஸ்ரீபாண்டியன், செங்கோட்டை.