செய்து அசத்துவோம் : துறுதுறு சுண்டெலி
தேவையான பொருள்கள்:
1. சதுர வடிவ பழுப்பு நிறத் தாள் (Brown colour paper)
2. கருப்பு மற்றும் அடர் பழுப்பு (Dark brown) நிற மை வரைவி (Sketchpen)
செய்முறை:
1. முதலில் சதுர வடிவத் தாளை எடுத்துக்கொள்ளவும்.
2. அதை, படம் 2இல் உள்ளது போல மேலிருந்து கீழாக மடிக்கவும்.
3. படம் 3இல் காட்டியபடி கோடிட்ட இடத்தை மடிக்கவும்.
4. படம் 4இல் உள்ளதுபோல கோடிட்ட இடத்தை மேல்நோக்கி மடிக்கவும்.
5. படம் 5இல் உள்ளதுபோல கோடிட்ட இடத்தை பின்புறமாக மடித்துக் கொள்ளவும்.
6. இப்பொழுது அடர் பழுப்பு (Dark brown) மற்றும் கருப்பு மை வரைவி கொண்டு கண், மூக்கு, மீசை ஆகியவற்றை வரைந்துகொள்ளவும்.
இப்பொழுது துறுதுறு சுண்டெலி தயார்!
பிஞ்சுகளே! ‘செய்து அசத்துவோம்’ பகுதிக்கு நீங்களும் உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.