தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சிவை அறிவோம் : DEGREES OF COMPARISON – 19 (ஓப்பீட்டு நிலைகள்)
இந்தக் கொடி மரம் என்ன சொல்கிறது?
-ஒரு பண்புச்சொல்லுக்கு மூன்று வெவ்வேறு நிலைகள் இருக்கின்றன என்பதைத்தான்.
நமக்குத் தெரியும் _ மனிதனுக்கு பண்புகள் தேவை என்பது. அதேபோல்- சொற்றொடரில் (sentenceஇல்) உள்ள பெயர்ச்சொல்லுக்கு (nounக்கு) பண்புச் சொற்கள் (Adjective) தேவை.
தீர்மானிக்கும் பண்புச்சொற்கள் (Determiners) என்பவை முகமூடி அணிந்த மறைமுக பண்புச்சொற்கள்.
வி(வ)ரிக்கும் பண்புச்சொற்கள் (Descriptive Adjectives) என்பவைதான் மிக முக்கியம். இவைதான் பொதுவாகவே Adjectives என்று அனைவராலும் கருதப்படுகின்றன.
கடந்தமுறை சொன்னதுபோல், பண்புச்சொல் (Adjective) அதிகம் பயன்படுத்தப்படும் இடமான ஒப்பீட்டு நிலைகளைப் (Degrees of Comparison)பற்றி விரிவாகப் பார்ப்போம்.
ஒப்பீட்டு நிலைகள் (Degrees of Comparison) 3 வகை ஆகும். இதன் மூன்று நிலைகளைத் தெரிந்து சொற்றொடர்களைப் பயன்படுத்துவதற்கு முன்… சில அட்டவணைகளைப் பாருங்கள்!
அட்டவணையில் சில பண்புச்சொற்களும் (Adjectives) அவற்றுக்கான மூன்று ஒப்பீட்டு நிலைகளும் (Degrees of Comparison) கொடுக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமல்ல, ஏராளமான பண்புச்சொற்கள் (Adjectives) உள்ளன. நாம் பார்ப்பது எடுத்துக்காட்டுகள் மட்டுமே.
எதற்கு இந்த 6 அட்டவணைகள்?
தமிழில் அசைகள் இருப்பதைப்போல் ஆங்கிலத்திலும் Syllables என்னும் சொற்பகுப்புகள் (word break up) உள்ளன.
அந்த வகையில் முதல் அட்டவணைப்படி ஓரசை பண்புச் சொற்கள் (one syllable word) மட்டும் வந்தால் Comparative–இல் bolder என்று கடைசியில் “er” இட்டு எழுத வேண்டும். Superlative-இல் boldest என்று கடைசியில் “est” இட்டு எழுத வேண்டும்.
2ஆவது அட்டவணைப்படி ஓரசை பண்புச் சொற்கள் (one syllable word) மட்டும் வந்து “e”இல் முடிவதால் Comparative–இல் கடைசியில் “r” மட்டும் சேர்க்க வேண்டும். Superlative-இல் “st” மட்டும் சேர்த்தால் போதுமானது.
3ஆவது அட்டவணைப்படி consonant + short vowel + consonant என்னும் அமைப்பில் ஓரசை பண்புச் சொற்கள் வந்திருப்பதால் bigger என்று ஒரு “g” இரண்டாக மாறும்.
4ஆவது அட்டவணைப்படி இரண்டு அசைகள் கொண்ட ஈரசைப் பண்புச் சொற்கள் மட்டும் வந்து “y”-இல் முடிந்தால் comparative–இல் y-அய் எடுத்துவிட்டு, “ier” சேர்க்க வேண்டும். Superlative–இல் “iest” சேர்க்க வேண்டும்.
5ஆவது அட்டவணைப்படி வருபவை ஆங்கிலத்தில் வழக்கமான பண்புச் சொற்களிலிருந்து விதிவிலக்கானவை. அவற்றின் comparative-வும், superlative-வும், வேறு வார்த்தைகளாக இருக்கும் (எ-கா: good (positive) – better (comparative) – best (Superlative)
6ஆவது அட்டவணைப்படி ஈரசைப் பண்புச்சொற்களும் அதற்கு மேற்பட்ட நீளமான பண்புச்சொற்களும் வருகின்றன. Comparative–இல் பண்புச் சொல்லின் முன்புறம் more, Superlative-இல் முன்புறம் the most சேர்த்து எழுத வேண்டும்.
வரும் இதழில் எங்கு Positive, எங்கு Comparative, எங்கு Superlative பயன்படுத்தலாம் என்பதை எடுத்துக்காட்டுகளுடன் பார்ப்போம்.
(தொடரும்)