செய்து அசத்துவோம் : அழகிய மீன்
வாசன்
தேவையான பொருள்கள்:
1. சதுவ வடிவ வண்ணத் தாள் ஒன்று.
2. கருப்பு மை வரைவி (Black Ink Sketch Pen)
செய்முறை:
1. முதலில் படம் 1ல் கோடிட்டுள்ளபடி, வண்ணத்தாளை இரு சம பாகங்களாக மேலிருந்து கீழாக நடுவில் கோடுவரும் படிமடிக்கவும். பின்னர் பழையபடி விரித்துக் கொள்ளவும்.
2. பிறகு படம் 1ல் காட்டியுள்ளபடி, முழுத்தாளையும் ஒரு முனையிலிருந்து மறு முனைக்குக் கோடு வரும்படி, நான்கு முனைகளையும் மடிக்கவும். பின்னர் தாளை பழையபடி விரித்துக் கொள்ளவும்.
3. இப்போது படம் 2இல் காட்டியபடி நடுக் கோட்டுப் பகுதி இரண்டையும் உள்புறமாக மடித்து, படம் 3இல் காட்டியபடி இரண்டு முக்கோணப் பகுதிகள் மட்டும் வரும்படி மடித்துக் கொள்ளவும்.
4. உச்சிக்கு நேர் கீழே இல்லாமல், அடிப்பகுதியில் வலப்புறமாக சற்று தள்ளி இடப்புறம் நோக்கி மடிக்க வேண்டும்.
5. அவ்வாறே படம் 5இல் காட்டியுள்ளபடி இடப்புறமிருந்து வலப்புறம் நோக்கி மடிக்க வேண்டும்.
6. அதை அப்படியே திருப்பிக் கொள்ளவும். இப்பொழுது உங்களுக்கு அழகிய வண்ண மீன் வடிவம் கிடைத்துவிடும். இப்பொழுது கருப்பு மை வரைவி கொண்டு மீனின் கண், வாய் ஆகியவற்றை வரைந்து கொள்ளவும்.
பிஞ்சுகளே! இப்போது, துள்ளாத மீன் உங்கள் கையில்!