188 years challenge- ஆமைத் தாத்தா
வாருங்கள்-! ஹலோ சொல்லுவோம் உலகின் அதிக வயதான ஜொநாதானுக்கு.
பல உயிரினங்கள் மனிதர்களின் வாழ்நாளைவிட அதிகமான ஆண்டுகள் வாழ்வதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். படித்திருப்போம். அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக எப்போதுமே நிற்பவை ஆமைகள்தாம். அத்தகைய ஆமை ஒன்று மார்ச் மாதம் தன்னுடைய 189-ஆம் வயதைக் கொண்டாடுகிறது.
ஜொநாதான்(Jonathan) என்னும் பெயருடைய அந்த ஆமை அல்டாபிரா (Aldabra) வகையைச் சேர்ந்த பெரிய ஆமை வகை. இதுதான் நிலவாழ் ஆமைகளிலேயே மிகப் பெரிதாக வளரக்கூடிய வகை. அதிலும் ஜொநாதான்தான், உலகில் வாழும் நிலவாழ் உயிரினங்களிலேயே அதிக ஆண்டுகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் உயிரினம்.
ஜொநாதான், தற்போது சிசெல்ஸில்(Seychelles),செயின்ட் ஹெலெனா என்ற தீவில் ஆளுநரின் பிளான்டேஷன் என்னும் இல்லத்தின் தோட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறது. 1832ஆ-ம் ஆண்டு பிறந்த ஜொநாதானை வைத்து, 1886ஆ-ம் ஆண்டு ஒருமுறை ஒளிப்படம் எடுக்கப்பட்டது. அந்தப் படத்தோடு, தற்போது எடுக்கப்பட்ட படம் ஒன்றைச் சேர்த்து
#188 years challenge என்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
1886இ-ல் ஒளிப்படம் எடுக்கையில் ஜொநாதானுக்கு 54 வயது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைய படத்தில் காணப்படுவதும் அதே ஆமைதான். இன்று அதன் வயது 188! அதுமட்டுமல்லாமல், அது இன்றும் ஆரோக்கியமாக வாழ்ந்து-கொண்டிருக்கிறது.
இருப்பினும் காற்று மாசு, உணவில் சேர்க்கப்பட்ட வேதிப்பொருள்கள் மற்றும் கடல் நீரின் வெப்ப நிலை மாற்றம் காரணமாக அதன் உடல், முதுமையை நோக்கிச் சென்றுகொண்டு இருக்கிறது. இதைச் சமன்செய்ய, அதிகமான கலோரிகள் நிறைந்த உணவை மருத்துவர் ஹோலின்ஸ் அதற்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
இவ்வகை ஆமைகள் 500 ஆண்டுகள் வரை வளரும் என்றும் அப்படி வளர்ந்து உயிரிழந்த பல ஆமைகளின் எலும்புக்கூடுகள் நியூசிலாந்து நியு கினியா போன்ற தீவு நாடுகளின் உள்ள கடல்வாழ் உயிரின அருங்காட்சி நிலையங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன என்றும் கூறுகிறார்.
இதில் ஆஸ்திரேலியாவின் பிரின்ஸ்வேல்ஸ் தீவில் இரண்டு பாறைகளுக்கு இடையே சிக்கி பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன ஓர் ஆமையின் எலும்புகள் எந்தவித சிதைவும் இல்லாமல் மீட்கப்பட்டன. அந்த ஆமையின் எலும்புக்கூட்டை ‘கார்பன் டேட்டிங்’ முறையில் ஆய்வு செய்த போது சுமார் 1200 ஆண்டுகளில் இருந்து 1400 ஆண்டுகள் வரை அது வாழ்ந்தது தெரியவந்துள்ளது.<