• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

அசத்தும் அறிவியல் : ஸ்கெட்ச் பேனா ஊதுகுழல்

2021_jun_v25
அறிவியல்ஜூன் 2021

முதலில் ஒரு ஸ்கெட்ச் பேனாவை எடுத்து உள்ளிருக்கும் மை உறிஞ்சும் பஞ்சு உள்ள குழலை நீக்கி விட வேண்டும். பேனாவின் கூர் முனையை மட்டும் வெட்டி விட வேண்டும். இப்பொழுது நம்மிடம் தோராயமாக ஒரு ஏழு சென்டிமீட்டர் அளவிலே வெட்டிய ஸ்கெட்ச் பேனா குழல் இருக்கும்.

ஒரு சிறிய நெகிழி அட்டையை (Plastic Board), எடுத்துக் கொள்ளவும்.

நெகிழி அட்டையை ‘L’ (Plastic Board) வடிவில் மடக்கவும்.

‘L’ வடிவில் உள்ள அந்த நெகிழி அட்டையை ஸ்கெட்ச் பேனாவின் ஒருமுனையின் வாயை அடைக்கவும்.

அடைத்து விட்டு அந்த ஸ்கெட்ச் பேனாவையும் நெகிழி அட்டையையும் இணைக்க ரப்பர் பேண்ட் பயன்படுத்தவும்.

இப்பொழுது அடைக்கப்பட்ட பகுதியிலே காற்றை ஊதினால் ஸ்கெட்ச் பேனா ஊதுகுழல் தயார்.

என்ன நடக்கிறது? அறிவியல் காரணம்?

ஒலி உண்டாக முக்கியமாக மூன்று காரணிகள் உண்டு அது.

1. அதிர்வு 2. உராய்வு மற்றும் 3. ஒரு ஊடகத் தேவை.

இங்கே அடைக்கப்பட்ட அந்த ஸ்கெட்ச் பேனா குழாய் வழியே ஊதும் பொழுது காற்று வேகமாக உள்ளே செல்கிறது. அப்படிச் செல்லும் பொழுது நெகிழி அட்டையை உரசிக்கொண்டே காற்று உள்ளே செல்வதால் அதிர்வு உண்டாகும். அந்த அதிர்வின் காரணமாகத்தான் ஒலி உண்டாகிறது.

இந்த ஒலியானது காற்றின் வழியே பரவி நம் காதுகளுக்கு வந்து அடைவதால் நம்மால் அதைக் கேட்க முடிகிறது.

காற்றில் ஒலி பரவக்கூடிய வேகமானது நொடிக்கு 330 மீட்டர் ஆகும். இதுவே நீரில் அது நொடிக்கு 700 மீட்டர். திடப் பொருளில் அது  நொடிக்கு 1000த்திற்கும் மேற்பட்ட மீட்டர்  பாயக்கூடிய வேகம்.

இடியின் ஒலி முதலில் கேட்குமா அல்லது மின்னலின் ஒளி நமக்கு கண்ணில் முதலில் தென்படுமா என்று பார்த்தாலும் மின்னலின் ஒளி தான் நமக்கு முதலில் வந்தடையும். ஏனென்றால், ஒளி பாயக்கூடிய வேகம் நொடிக்கு 300000 கிலோ மீட்டர் (3×108 m/s). ஆனால், இடியின் ஒலி பாயக்கூடிய வேகம் (அது காற்றில் வருவதால்) ஒரு நொடிக்கு 330 மீட்டர். அதனால்தான் மின்னலின் ஒளி நம் கண்களுக்கு முதலில் வந்தடையும் பிறகுதான் இடியின் ஒலி நம் காதில் கேட்கும்.

இந்த ஊதுகுழலை அவசர காலத்தில் கட்டத்தில் தற்காப்புக்காகப் பயன்படுத்தலாம்.

27
படக்கதை : வைர நெஞ்சன் வால்டேர்!படக்கதை : வைர நெஞ்சன் வால்டேர்!1st June 2021
இருக்கே.. சேதி இருக்கே! - ஸ்லாத்1st June 2021இருக்கே.. சேதி இருக்கே! - ஸ்லாத்

மற்ற படைப்புகள்

2019_nov_v31
அறிவியல்நவம்பர் 2019
1st November 2019 by ஆசிரியர்

அறிவியல் படக்கதை – அய்ன்ஸ்ரூலி

Read More
30
அறிவியல்பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2025
5th February 2025 by ஆசிரியர்

கோள்களின் அணிவரிசை காண்ப்பீர்

Read More
18
அறிவியல்டிசம்பர் 2023பிஞ்சு 2023
13th December 2023 by சரவணா இராஜேந்திரன்

சாதனை : 2023 ஆண்டிற்க்கான நோபல் பரிசுகள்

Read More
2020_apr_v20
அறிவியல்எப்ரல் 2020கதை
27th March 2020 by ஆசிரியர்

படக்கதை – அறிவியல் மேதை அய்ன்ஸ்டீன்

Read More
2022_jan_v43
அறிவியல்கதைஜனவரி 2022
6th January 2022 by ஆசிரியர்

அய்ன்ஸ்ரூலி – அறிவியல் படக்கதை : வைரஸ் – தோற்றம் எப்போது?

Read More
2020_aug_v29
அறிவியல்ஆகஸ்ட் 2020
1st September 2020 by ஆசிரியர்

அறிவியல்: செயற்கைக் கோளின் வெளிப்புறத்தில் தங்கமா? நமது குரலைக் கேட்கும் வேற்றுலக உயிரினங்கள்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p