குறுக்கெழுத்துப் போட்டி
கேள்விகள்
மேலிருந்து கீழ்
1. தமிழர்களின் கேட்டைப் போக்கும் நாளேடு _____(4)
2. இடுப்பில் கட்டியிருந்த இதை தமிழர்களின் தோள்களில் தவழவிட்டது திராவிடர் இயக்கம் _____ (3)
3. பச்சைத் தமிழர் காமராசர் பிறந்த ஜூலை 15ஆம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்துக் கொண்டாடிய தமிழ்நாட்டு முதலமைச்சர் _____ (4)
4. வேத மதத்தை மறுத்துத் தோன்றியவை புத்தம், _____ (4)
7. கோடையில் செல்லலாம் சுற்றுலா _ குளுகுளு _____ க்கு (3)
8. இளைஞர்களுக்கு வேண்டும் _____ (5)
9. உலகைப் பார்க்க, ரசிக்க நமக்குத் தேவை _____ கள் (2)
11. “அறிவால் ஆற்றலால் ஆகாத காரியம் எதுவுமில்லை’’ என்றார் பேரறிஞர் _____ (3) கீழிருந்து மேலாக.
12. “பாதாள _____’’ திரைப்படம் (3) கீழிருந்து மேலாக.
13. ஓர் ஊரின் பெயர் _____ (3) கீழிருந்து மேலாக.
இடமிருந்து வலம்
1. கல்வி வள்ளல் காமராசர் பிறந்த ஊரின் இன்றைய பெயர் _____ (6)
5. “அந்தி _____ பொழிகிறது’’ திரைப்பாடல். திரும்பியுள்ளது (2)
6. மாடுகளின் உணவுகளுள் ஒன்று _____ (3)
7. திராவிடர் கழக மாநாடுகளில் மூடநம்பிக்கைகள் ஒழிப்பு _____ கட்டாயம் நடைபெறும் (5)
10. முகம் பார்க்க உதவும் _____ (4)
12. வெப்பத்தைப் போக்க அறைகளில் சுழலும் மின் _____ (3)
14. “சிதம்பர _____ ம்’’ குழம்பியுள்ளது (4)
15. “மானமும் _____ ம் மனிதர்க்கழகு’’ என்றார் தந்தை பெரியார். திரும்பியுள்ளது (3)
16. மராட்டியத்தின் தலைநகர் _____ (3) திரும்பியுள்ளது.
– பெரியார்குமார்,
இராசபாளையம்
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை ஜூலை 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். பரிசுகளை வெல்லலாம்!
கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டியில் சரியான விடையெழுதியவர்களுள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டோர்:
வெற்றிப்பெற்றோர்:
1. இர.அறிவரசி
2. அ.மகேஸ்வரன்