தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் – நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] – 24
கே.பாண்டுரங்கன்
அடித்தளத்தை ஆழமாகப் பதித்தால்தான் கட்டடம் பலமாக இருக்கும் _ அல்லவா?
அதே போல் நேர்க்கூற்று _ அயற்கூற்று புரிய வேண்டுமானால் சில அடிப்படைகள் தெரிய வேண்டும்தானே?
நினைவிருக்கிறதா?
Noun என்றால் என்ன?
Pronoun என்றால் என்ன?
ஏற்கெனவே தெரிந்துகொண்டிருந்தாலும் இங்கே மீண்டும் நினைவுக்கு…
Noun = பெயர்ச் சொல்
Pronoun = பிரதிப் பெயர்ச் சொல் அல்லது நகல் பெயர்ச் சொல்.
எடுத்துக்காட்டாக…
மருதன் [Maruthan] என்ற Nounக்கு உரிய Pronoun – “அவன்” – அதாவது ஆங்கிலத்தில் “He” என்பதாகும்.
அதேபோல் கயல் என்ற Nounக்கு Pronoun = “அவள்’’ … அதாவது ஆங்கிலத்தில் “She” என்பதாகும்.
அதேபோல் புத்தகம் என்ற Nounக்கு Pronoun – “அது” – அதாவது ஆங்கிலத்தில் “It” என்பதாகும்.
இதைப் பற்றி கடந்த இந்தத் தொடரின் 3ஆவது பகுதியில் படித்தோம் அல்லவா?
Pronoun Table (பிரதிப் பெயர்ச் சொல் அட்டவணை):
மேற்கண்ட Pronoun Table (பிரதிப் பெயர்ச்சொல் அட்டவணை) நேர்க்கூற்றிலிருந்து அயற்கூற்றுக்கோ, அல்லது அயற்கூற்றிலிருந்து நேர்க்கூற்றுக்கோ மாற்றும்போது மிகவும் தேவைப்படும்.
மீண்டும் உரையாடல் சொற்றொடருக்கு வருவோம்!
நான்கு விதமான உரையாடல் சொற்-றொடர்களிலும் முக்கியமான இரண்டு பகுதிகள் உள்ளன. அல்லவா?
1. பேசுபவர் பகுதி அல்லது உரையாடுபவர் பகுதி (Reporting Clause),
2. பேசுகின்ற பகுதி அல்லது உரையாடல் பகுதி (Reported Clause).
கடந்த இதழில் பேசுபவர் பகுதியை (Reported Clause) மேலோட்டமாகப் பார்த்தோம். இப்போது விரிவாக… விளக்கமாகப் பார்ப்போம்.
பேசுபவர் பகுதி (Reporting Clause)
A, B, C என்ற மூன்று பேர்களை எடுத்துக் கொள்வோம்…
A = 1st person (தன்மை)
B = 2nd person (முன்னிலை)
C = 3rd person (படர்க்கை)
1
[A = 1st person (தன்மை), B = 2nd person (முன்னிலை) என்பதை நினைவில் கொள்ளுங்கள்]
இப்போது…
A என்ற ஒருவர் B என்ற மற்றொருவரிடம் பேசுவதாக வைத்துக் கொள்வோம்.
அல்லது
B என்ற ஒருவர் A என்ற மற்றொருவரிடம் பேசுவதாக வைத்துக் கொள்வோம்.
பொது எ-.கா.:
[கீழே எடுத்துக்காட்டுகள் கொடுத்துள்ளேன். பயிற்சிக்காக… Pronoun Table (பிரதிப் பெயர்ச்சொல் அட்டவணை) யைப் பயன்படுத்தி தமிழ்ப் படுத்திப் பாருங்கள்!]
தற்போது பேசுபவர் பகுதி என்பதைப் பற்றி மட்டும் பார்ப்பதால்..
பேசுகின்ற [Reported] பகுதியைத் தற்காலிகமாக ஒதுக்கி வைப்போம்.
எடுத்துக்காட்டுகள்:
I said to You, “I am right” (சாதாரண சொற்றொடர்)
I said to You, “what is right?” (கேள்விச் சொற்றொடர்)
I said to You, “Be a right person” (கட்டளைச் சொற்றொடர்)
I said to You, “oh, no! of course, you are right!” (உணர்ச்சிச் சொற்றொடர்)
அல்லது
You said to me, “ I am right” (சாதாரண சொற்றொடர்)
இதே போல் சாதாரண, கேள்வி, கட்டளை, உணர்ச்சிச் சொற்றொடர்களிலும் அமையலாம்
2
[ B = 2nd person (முன்னிலை), C = 3rd person (படர்க்கை) என்பதை நினைவில் கொள்ளுங்கள்]
இப்போது…
B என்ற ஒருவர் C என்ற மற்றொருவரிடம் பேசுவதாக வைத்துக் கொள்வோம்.
(அல்லது)
C என்ற ஒருவர் B என்ற மற்றொருவரிடம் பேசுவதாக வைத்துக் கொள்வோம்.
பொது எடுத்துக்காட்டு.:
எ.கா.:
you said to him/her, “I am right” (சாதாரண சொற்றொடர்)
இதே போல் சாதாரண, கேள்வி, கட்டளை, உணர்ச்சிச் சொற்றொடர்களிலும் அமையலாம்
அல்லது
He/She said to You, “I am right” (சாதாரண சொற்றொடர்)
இதே போல் சாதாரண, கேள்வி, கட்டளை, உணர்ச்சிச் சொற்றொடர்களிலும் அமையலாம்
3
[ C = 3rd person (படர்க்கை), A = 1st person (தன்மை) என்பதை நினைவில் கொள்ளுங்கள்]
இப்போது…
C என்ற ஒருவர் A என்ற மற்றொருவரிடம் பேசுவதாக வைத்துக் கொள்வோம்.
அல்லது
A என்ற ஒருவர் C என்ற மற்றொருவரிடம் பேசுவதாக வைத்துக் கொள்வோம்.
பொது எடுத்துக்காட்டு :
எடுத்துக்காட்டுகள்:
He/She said to me, “I am rightt (சாதாரண சொற்றொடர்)
இதே போல் சாதாரண, கேள்வி, கட்டளை, உணர்ச்சிச் சொற்றொடர்களிலும் அமையலாம்
அல்லது
I said to him/her, “I am right” (சாதாரண சொற்றொடர்)
இதே போல் சாதாரண, கேள்வி, கட்டளை, உணர்ச்சிச் சொற்றொடர்களிலும் அமையலாம்
தற்போது பேசுபவர் பகுதி (Reporting clause)யில் 1st person (தன்மை), 2nd person (முன்னிலை), 3rd person (படர்க்கை) ஆகிய மூன்று Pronounகளும் எப்படிப் பயன்படுகின்றன என்று பார்த்தோம். வரும் இதழ்களில் மூன்று Pronounகளும் பேசுகின்ற பகுதி (Reported Clause)யில் சரியான பொருள்களில் எப்படி மாற்றமடைகின்றன என்பதையும் பார்ப்போம்!
– தொடரு(வோ)ம்