வாசகர் கடிதம்
எப்படி இருக்கு பெரியார் பிஞ்சு?
பெரியார் பிஞ்சு மே 2021 படித்தேன். அதுபற்றி எழுதுகிறேன்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் சொற்புதையல் மிக அருமை.
அயன்ஸ்ரூலி _ அறிவியல் படக்கதையில் தூக்கம் பற்றி நிறையத் தெரியலாம்.
சொல்கேளான் மானமிகு ஏ.வி.கிரி அவர்கள் மெழுகு பற்றி ஏகப்பட்ட நல்ல நல்ல செய்திகளைச் சொல்கிறார்கள்.
8 கோள்களும் என்றுமே எப்போதுமே சந்திக்காதே!
பொது அறிவு வினாக்கள் தேவை.
குறள், தமிழ் பற்றிய செய்திகள் வெளியிடலாம்.
தமிழக மாவட்டங்கள் பற்றிய குறிப்புகள் வேண்டும்.
பழமொழி, விடுகதை, புரட்சிக்கவிஞர் சிறு சிறு பாடல்கள் விருப்பம்.
தந்தை பெரியார் சொன்ன பகுத்தறிவுப் பாடங்கள் உடனடியாக இருக்கலாம்.
5இல் வளையாதது 50இல் …..
நல்ல பழக்கங்களைக் குறிப்பிடலாம்.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் செய்திகள் இடம் பெறலாம்.
– க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி – 624705
வாங்கியும் படிக்கலாம்.
https://storyweaver.org.in/
இணையத்தில் இலவசமாகவும்
படிக்கலாம். பல மொழிகளிலும்
புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதே போல் ஏராளமான
தமிழ்ப் புத்தகங்களும் கிடைக்கின்றன.