கணக்கு : எண்ணோடு விளையாடு!
திருச்சி தமிழன்பன்
I. பெருக்கல் விடையைச் சரிபார்த்தல்
439
X 217
3073
439
878
95263
i . முதல் எண்ணின் இலக்கங்களின் கூட்டுத்தொகை.
4+3+9=16 —-> 1+6=7
ii . இரண்டாவது எண்ணின் இலக்கங்களின் கூட்டுத்தொகை
2+1+7=10 —-> 1+0=1
பெருக்குத் தொகையின் இலக்கங்களின் கூட்டுத் தொகை
9+5+2+6+3=25 —-> 2+5=7
(முதல் எண்ணின் இலக்கங்களின் கூட்டுத் தொகை) X (இரண்டாவது எண்ணின் இலக்கங்களின் கூட்டுத் தொகை) = பெருக்கல் பலனின் உள்ள எண்ணின் இலக்கங்களின் கூட்டுத் தொகை. அதாவது,
7 X 1= 7
II. இரண்டு இரண்டிலக்க (Two digit number) எண்களின் பெருக்குத் தொகை, ஒவ்வொரு எண்ணின் இலக்கங்களை மாற்றி எழுதிப் பெருக்குவதால் கிடைக்கும் பெருக்குத் தொகைக்குச் சமமாகச் சில நேரங்களில் அமையும்.
i . 13 X 62 = 806
31 X 26 = 806
ii .24 X 63 = 1512
42 X 36 = 1512
iii. 12 X 42 = 504
21 X 24 = 504
இப்படி எல்லா எண்களுக்கும் இருக்க வாய்ப்பில்லை. என்றாலும், உங்களால் இதேபோல் கண்டுபிடிக்க முடிந்த இரண்டு இணை எண்களை (pairs) எழுதுக?
III. இரண்டு எண்களின் கூட்டலும் பெருக்கலும் சமமாகும் சில கணக்குகள்.