எப்படி? எப்படி?
கேள்வி: பனைமரத்தில் ஆண், பெண் என்ற இரு இனம் இருப்பதுபோல தென்னைமரத்தில் இருப்பதில்லையே ஏன்? – கே.மீனா, அரிமளம்
பதில்: ஒரு தாவரத்தில் ஆண் மலர் உள்ள மகரந்தத்தில் காணப்படுவது ஆண் மரம் என்றும் பெண் மலர் உள்ள மகரந்தச் சூலகத் தொகுப்புக் கொண்டது பெண்மரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரு அமைப்புகளுமே ஒரே மலரில் அமையப்பெற்றால் அதை இருபால் மரம் என அழைக்கிறோம். தென்னை இருபால் மரமாகும். இதில் ஆண் பூக்களும் பெண் பூக்களும் ஒரே கொத்தில் காணப்படும். தென்னைமரப் பூங்கொத்தின் நுனியில் சுமார் 200 முதல் 300 எண்ணிக்கையில் ஆண் பூக்களும் அடிப்பகுதியில் குறைந்த அளவில் பெண் பூக்களும் உள்ளன. எனவே, ஆண் பெண் என்ற இனத்தைக் கொண்ட இருபால் மரமாக தென்னை விளங்குகிறது.
– முகில் அக்கா