இசைப்போம் வாரீர்! – வெறுங்கை என்பது மூடத்தனம்
Scale: B MINOR 5/8
பல்லவி
தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்
/சாசா / சாச ச / பாசாக / ரீரிரி /
தூய தமிழரை தமிழ் கொண்டெழுப்பினோம்
/சாசா / சாசச / பாசாக / ரீரீரி /
தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்
/சாசாசா / சாசச / பாசாக / ரீரிரி /
செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம்
/காமப / பாபா / பாதாநி / சாசச/
பின்னணி இசை
தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்
/சாசா / சாச ச / பாசாக / ரீரிரி /
தூய தமிழரை தமிழ் கொண்டெழுப்பினோம்
/சாசா / சாசச / பாசாக / ரீரீரி /
தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்
/சாசாசா / சாசச / பாசாக / ரீரிரி /
செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம்
/காமப / பாபா / பாதாநி / சாசச
சரணம் – 1
பண்டைப் பெரும்புகழ் உடையோமா? இல்லையா?
/சாநீப / பாபப / காமாம / பாப பா /
பாருக்கு வீரத்தைச் சொன்னோமா இல்லையா!
/சாநீப / பாபப / காமாம / பாப பா…/
பண்டைப் பெரும்புகழ் உடையோமா? இல்லையா?
/சாநீப / பாபப / காமாம / பாப பா /
பாருக்கு வீரத்தைச் சொன்னோமா இல்லையா!
/சாநீப / பாபப / காமாம / பாப பா…/
எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா?
/சாசாசா / மாமாமா / பாபாபா / சாநிப /
எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா?
/சாகாமா / பாமாகா / சகநிச / பநிமபா /
சரணம் – 2
செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா?
/சாநீப / பாப / காமாம / பாப பா /
சூழ்ச்சி நரிதான் நடுங்கிற்றா இல்லையா?
/சாநீபபாப / காமாம / பாப பா /
முந்தாநாள் விட்ட பிஞ்சுகள் தமிழை
சாசா / காகா /மாமாமா / சசநி /
முறிக்க எண்ணுதல் மடமையா, இல்லையா?
/ சகமபாமக / சகநிச / பநிமபா…/
தமிழர் ஒற்றுமை நிறைந்ததா இல்லையா?
/நிநிநி / நீநிநி / நிதபமா /பாதநீ…/
தக்கைகள் ஆட்சி சரிந்ததா இல்லையா?
/காகக /காக / கரிசநி / நிதபம /
தமிழர் ஒற்றுமை நிறைந்ததா இல்லையா?
/நிநிநி / நீநிநி / நிதபமா /பாதநீ…/
தக்கைகள் ஆட்சி சரிந்ததா இல்லையா?
/காகக /காக / கரிசநி / நிதபம /
தமக்குத் தமிழகம் அடிமையே என்னும்
/ககச / மமமா / பபபா / சாநீ /
சழக்கு மரவேர் அறுந்ததா இல்லையா?
/சகம / மமமா / சகநிச / பநிமபா…/
தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்
/சாசா / சாச ச / பாசாக / ரீரிரி /
தூய தமிழரை தமிழ் கொண்டெழுப்பினோம்
/சாசா / சாசச / பாசாக / ரீரீரி /
தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்
/சாசாசா / சாசச / பாசாக / ரீரிரி /
செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம்
/காமப / பாபா / பாதாநி / சாசச /
இசைக் குறிப்பு: விஜய் பிரபு