அய்ந்து வயதுச் சிறுமியின் வாசிப்புச் சாதனை!

அமெரிக்காவில் வாழும் சென்னையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்த இந்திய – அமெரிக்க சிறுமியான அய்ந்து வயது கியாரா கவுர், அரபு அமீரகத்தில் படித்து வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 36 புத்தகங்களை 1 மணிநேரம் 45 நிமிடங்களில் படித்து முடித்து உலக சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து லண்டன் அமைப்பு இவருக்குக் ‘குழந்தை மேதை’ என்கிற பட்டம் வழங்கி பாராட்டியும் உள்ளது.
முதலில் கியாரா கவுருக்கு புத்தகங்களைப் படிப்பதில் உள்ள ஆர்வத்தை அபுதாபியில் உள்ள அவரது ஆசிரியர்தான் கவனித்து ஊக்கமளித்துள்ளார். ‘ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட்’, சிண்ட்ரெல்லா, லிட்டில் ரெட் ரைடிங் ஹீட் மற்றும் ஷூட்டிங் ஸ்டார் ஆகியவை கியாராவுக்குப் பிடித்த புத்தகங்களாம். இச்சாதனைக்குப் பிறகு கியாரா கவுர் கூறுகையில், “புத்தகங்கள் படிப்பது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியது. ஸ்மார்ட் போன், இணைய இணைப்பு, வீடியோ என புத்தகங்களைப் படிப்பதைவிட, கைகளில் ஒரு புத்தகத்தை வைத்துப் படிப்பதுதான் எனக்கு வசதியானதும் மகிழ்ச்சியானதுமாகும். பிஞ்சுகளே நீங்களும் புத்தகங்களை வாசித்து, புது உலகத்திற்குப் பயணமாகுங்கள்!