• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

மழை! மழை!

2021_oct_v47
அக்டோபர் 2021பாடல்கள்

குயிலக்கா பாடல் கேட்டுக்

கோலஎழில் தோகை கொண்டு

மயில்மாமா மகிழ்வாய் ஆட

மழைமேகம் கருக்கு தம்மா!

தவளையண்ணா சத்த மிட்டே

தாளமுடன் குரலெ ழுப்பக்

கவலையுடன் நண்டும் ஓடக்

கனமழைதான் கொட்டு தம்மா!

வான்பறவை கூட்டை நோக்கி

வட்டமிட்டுப் பறந்தே ஓடத்

தேன்வண்டும் ஓய்வெ டுக்கத்

திசையெங்கும் மழைதா னம்மா!

எருமையுடன் விலங்கெல் லாமே

இன்பத்தை அனுப விக்க

பெருமழைதான் பெய்யு திங்கே;

பிள்ளைகளின் கொண்டாட் டம்தான்!

நாடெல்லாம் மழைமி குந்தால்

நலமாகும் உழவர் வாழ்வு;

காடெல்லாம் பசுமை யாகும்;

காசினியின் பஞ்சம் நீங்கும்!

நகரத்தில் மழைபெய் திட்டால்

நம்பள்ளி விடுமு றைதான்;

சுகமாக மழையில் ஆடிச்

சுறுசுறுப்பாய் ஆவான் கிட்டு!

 

– கே.பி.பத்மநாபன்,

 

சிங்காநல்லூர்,

 

கோவை-641005

25
அய்ந்து வயதுச் சிறுமியின் வாசிப்புச் சாதனை!அய்ந்து வயதுச் சிறுமியின் வாசிப்புச் சாதனை!1st October 2021
எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!1st October 2021எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

மற்ற படைப்புகள்

2021_aug_v43
ஆகஸ்ட் 2021பாடல்கள்
4th August 2021 by ஆசிரியர்

உறுப்புகளால் உயர்க!

Read More
2021_jul_v20
ஜூலை 2021பாடல்கள்
4th July 2021 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – சின்னப் பயலே சின்னப் பயலே

Read More
2021_oct_v3
அக்டோபர் 2021பாசத்திற்குரிய பேத்தி
28th September 2021 by ஆசிரியர்

பெரியார் உலகம் படைபோம் வா!

Read More
2019_nov_v42
நவம்பர் 2019பாடல்கள்
1st November 2019 by ஆசிரியர்

பேர் சொல்லும் பிள்ளைகள்!

Read More
21
ஜூலை 2024பாடல்கள்பிஞ்சு 2024
16th July 2024 by - பாவலர் அழகு நிலவன், புதுக்கோட்டை

வேண்டும்! வேண்டாம்!

Read More
2022_nov_1
நவம்பர் 2022பாடல்கள்
7th November 2022 by ஆசிரியர்

சுட்டிக் குழந்தை

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p