சிந்தித்துப் பார்த்துச் செய்கையை மாற்று!
“மண்ணிலும் இருப்பான்
மரத்திலும் இருப்பான்
விண்ணிலும் இருப்பான்
வெளிச்சத்தில் இருப்பான்
என்னிலும் இருப்பான்
உன்னிலும் இருப்பான்
கண்டது அனைத்திலும்
கடவுள் இருப்பான்’’
என்பது உண்மை
என்றால் உலகில்
என்னை நீயும்
உன்னை நானும்
கண்ணால் காணும்
மனிதரைத் துதித்து
என்றும் மதித்து
இருப்பதை விடுத்து
மண்ணையும் கல்லையும்
மரத்தையும் கடவுளாய்
எண்ணி மடமையாம்
இருட்டில் கிடப்பதேன்?
தந்தை பெரியார்
தட்டிக் கேட்டார்
சிந்தித்துப் பார்த்துச்
செய்கையை மாற்று!
– தளவை இளங்குமரன்,
தளவாய்புரம், திருநெல்வேலி