நத்தையார்
உச்சி மீது இரண்டு நீள
உணர்ச்சிக் கொம்பு உள்ளவர்!
எச்சில் போல ஈரக் கோடு
இழுத்துக் கொண்டு செல்லுவர்!
கொட்டும் மழை வெயில்பு காத
கூடு கட்டும் வல்லவர்!
கிட்டப் பகை நெருங்கும் போது
குறுகிப் பதுங்கிக் கொள்ளுவர்!
கட்டும் கூட்டைச் சுமந்த வாறு
காலம் முற்றும் தள்ளுவர்!
நெட்டை மரம், மலையும் ஏறி
நெஞ்சைத் தொட்டும் அள்ளுவர்!
அத்தை வீடு செல்வ தாக
அவரைப் பலர் சொல்லுவர்!
நத்தை யாரை மெல்ல ஊரும்
நகர்வில் எவர் வெல்லுவர்?<
– தளவை இளங்குமரன்,
இலஞ்சி