கணக்கு: எண்ணோடு விளையாடு!
அன்பார்ந்த பெரியார் பிஞ்சுகளே!
கடந்த மாதம் ஓர் எண்ணை 11ஆல் எளிதாகப் பெருக்குவது எப்படி என்று பார்த்தோம். அதில் கொடுக்கப்பட்டிருந்த கணக்குகளுக்கான விடைகள்.
இனி ஓர் எண்ணை 12ஆல் எளிதாக எவ்வாறு பெருக்கலாம் என்பதை பார்ப்போம்.
குறிப்பு: ஒவ்வோர் எண்ணையும் இரண்டு மடங்காக்கி அதற்கு முன்னர் உள்ள எண்ணோடு கூட்டவும்.
1. 7இன் இரண்டு மடங்கு 14. இதில் 4அய் விடையின் முதல் எண்ணாக எழுதவும். மீதி 1அய் அடுத்த எண்ணின் (4) இரண்டு மடங்கோடு கூட்டி, அதனுடன் முந்தைய எண்ணையும் (7) கூட்ட வேண்டும். இப்படியே அடுத்தடுத்த இலக்கங்களுக்கு செய்யவும்.
2. கடைசியாக உள்ள 6இன் இரண்டு மடங்கோடு அதற்கு முன் உள்ள 3 உடன் கூட்ட வேண்டும்.
12+3=15இன் 5அய் விடையில் எழுதவும்.
3. மீதம் இருக்கும் 1அய் 6- உடன் கூட்டி விடையில் எழுதவும்.
4. வழக்கமான பெருக்கலில் இருந்து தான் இம்முறை கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை கீழ் வரும் முறையில் காணலாம்.
எ.கா.:
செய்து பார்க்க:
1. 12345 x 12 3. 67894 x 12
2. 684321 x 12 4. 89998 x 12
விடைகளை நீங்களே சரிபார்த்துக் கொள்ளுங்கள்.