தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்
நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] – 32
‘படர்க்கை படர்க்கையுடன் பேசும் உரையாடல்’
இந்த அலைபேசி உரையாடலைப் பாருங்கள்:
“என் சகோதரனும் உன் சகோதரியும் புத்தகக் காட்சிக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்’’ _ கவுதமன் கலைச் செல்வனிடம் சொல்கிறான்.
நேர்க்கூற்று:
Gouthaman said to Kalai selvan, “my brother and Your sister are going to Book Exhibition”
அயற்கூற்று:
Gouthaman told Kalai selvan that His brother and his sister were going to Book Exhibition.
இதுதான் ‘படர்க்கை படர்க்கையுடன்’ பேசும் (எ.கா.) உரையாடல்’ ஆகும்.
Pronoun–கள் மாற்றத்திற்கான அட்டவணைகள் நிறைய பார்த்து விட்டோம். இறுதியாக படர்க்கை படர்க்கையுடன் பேசும் உரையாடல் அட்டவணையைக் (கீழே) பார்ப்போம்!
அதற்கு முன் வழிமுறை(Formula) கவனியுங்கள்!
____________________________________________
‘அவன்’ ‘அவனிடம்’ பேசும்போது,
உரையாடல் பகுதியில் உள்ள
‘நீ’ ‘அவனாக’ மாறுவான்! (you > he)
‘நான்’ ‘அவனாக’ மாறுவான்! (I > he)
ஆனால்
‘அவன்’ ‘அவனாக’வே இருப்பான்! (he > he)
‘அவள்’ ‘அவளாக’வே இருப்பாள்! (she > she)
‘அது’ ‘அதுவாக’வே இருக்கும்! (it > it)
‘அவர்கள்’ ‘அவர்களாகவே இருப்பார்கள்!
(they > they)
_________________________________________
பெட்டியில் கொடுக்கப்பட்ட வழிமுறை (Formula) உங்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன். ஏனேனில் நீங்களோ நானோ அல்லாத ஒருவர் வேறொருவரிடம் பேசுகிறார். எனவே இதில் நமக்குத் தொடர்பில்லை அல்லவா?
She said to her/him
என்றவாறு படர்க்கை படர்க்கையுடன் (3rd Person to 3rd Person) பேசும் உரையாடலில்…
(பேசுகின்ற) உரையாடல் பகுதியில் Pronoun (தமிழில்: பிரதிப் பெயர்ச்சொல்) வந்தாலும் I (நான்) அல்லது You (நீ) அல்லது பிமீ, He, She, It
(அவன், அவள், அது) எது வந்தாலும்…
அந்த Pronoun படர்க்கையாக (3rd Person ஆக) மட்டுமே மாறும்.
(ஒருமை Pronoun ஒருமையாகவும் அதே நேரம் பன்மை Pronoun பன்மையாகவும் வரக்கூடும் _ அட்டவணையில் அது உங்களுக்குப் புரியும்!)