பாலைத் தயிராக்கும் பாக்டீரியா
மனிதர்களுக்கு நன்மை, தீமை செய்யும் உயிரினங்கள் உலகில் பல உள்ளன. அவற்றில் ஒன்றே பாக்டீரியா ஆகும். இந்த பாக்டீரியாவைக் கண்டுபிடித்தவர் ஆண்டன் வான் லீவன் ஹாக். இது எங்கும் உயிர்வாழும், மிக நுண்ணிய குளோரோஃபில் இல்லாத ஒரு செல் உயிரினம் ஆகும். பாக்டீரியாக்கள் நான்கு வகை இனமாக உள்ளன. அவை கோக்கஸ், பாஸிலஸ், விப்ரியோ மற்றும் ஸ்பைரல் ஆகும்.
பாக்டீரியாவின் மயிர் போன்ற அமைப்பிற்கு ப்லாகெல்லா என்று பெயர். ப்லாகெல்லா இல்லாத பாக்டீரியா அட்டிரிக்கஸ் ஆகும். பாக்டீரியாவின் சுவாச என்ஸைம்கள் ப்ளாஸ்மா மெம்ப்ரேனில் அமைந்திருக்கும். ஹைட்ரோட் ரோபிக் பாக்டீரியா தானாக உணவைத் தயாரிக்க இயலாதது. ஆட்டோட்ரோஃபிக் பாக்டீரியா தானாக உணவைத் தயாரிக்கக்கூடியது. ஆக்ஸிஜன் இருந்தால் மட்டும் உயிர்வாழும் பாக்டீரியா ஆப்ளிகேட் ஏரோப்கள் ஆகும். ஆக்ஸிஜன் இல்லாமலும் உயிர்வாழும் பாக்டீரியா ஃபாக்குலேட்டிங் அனே ரோப்கள் ஆகும்.
நன்மை பாக்டீரியா மனிதனுக்கு பயனுள்ளது என்று லூயிஸ் பாஸ்டர் நிரூபித்துள்ளார். பாக்டீரியா தாவரம் என்று நிரூபித்தவர் கார்ல் வில்ஹெம் வோன் நிகோல், பாலைத் தயிராக்கும் பாக்டீரியா லாக்டோ பாஸிலஸ். பாக்டீரியா மனிதனுக்கு வேளாண்மை, தொழில், மருத்துவம், உயிரியல் ஆராய்ச்சிக்குப் பயன்படுகிறது. மனித உடலில் இடக்கூடிய பொருள் டாக்ஸின் ஆகும்.
தீமை
டெட்டனஸ் நோயை உண்டாக்கும் பாக்டீரியா குளேஸ்ட்ரிடியம் டெட்டனஸ் ஆகும். காலராவை உண்டாக்கும் பாக்டீரியா விப்ரியோ ஆகும். தொழு நோய் உண்டாக்கும் பாக்டீரியாவைக் கண்டுபிடித்தவர் அய்.ஆர் ஹான்ஸன் ஆவார். தொழு நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாவின் பெயர் மைக்ரோ பாக்டீரியம் வெப்ரே ஆகும். பாக்டீரியாவால் உணவு, பருத்தி ஆடைகள் முதலியவை கெட்டுப்போதல், நோய்கள், நைட்ரஜன் சிதைவுகள் ஏற்படுகின்றன. இவ்வாறு மனிதர்களுக்கும், பல உயிரினங்களுக்கும் பாக்டீரியா நன்மையையும், தீமையையும் அளிக்கிறது.
சு. தமிழ்மணி,
7ஆம் வகுப்பு, ஆ பிரிவு,
நகராட்சி உயர்நிலைப் பள்ளி,
அருப்புக்கோட்டை.