நாணயங்கள் எங்கே உற்பத்தியாகின்றன?
நமது இந்திய ரூபாய் தாள்கள் நாசிக் நகரத்தில் அச்சிடப்படுகின்றன. ஆனால், நாணயங்கள் எங்கே அச்சிடப்படுகின்றன என்று தெரியுமா?
நொய்டா, மும்பை, கொல்கத்தா, அய்தராபாத் போன்ற நகரங்களில் உள்ள இந்திய அரசின் காசாலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாணயத்தின் கீழே அந்த நாணயம் அச்சிடப்பட்ட ஆண்டும் ஒரு குறியீடும் இருக்கும்.
புள்ளி வடிவக் குறியீடு இருந்தால் அந்த நாணயம் நொய்டாவிலும், வைரம் போன்ற வடிவம் இருந்தால் அது மும்பையிலும், நட்சத்திர வடிவம் பொறிக்கப்பட்டிருந்தால் அது அய்தராபாத்திலும், எந்த ஒரு குறியீடும் இல்லாமல் இருந்தால் அது கொல்கத்தாவிலும் உற்பத்தி செய்யப்பட்ட நாணயமாகும்.
– வி.தங்கமணி