• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்

இலக்கணம்ஜூன் 2022

நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] – 33

நேர்க் கூற்றிலிருந்து அயற்கூற்றுக்கு மா(ற்)றும் போது உரையாடலில் உள்ள சொற்களில் என்ன என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதை பாகம் (அத்தியாயம்)_26இல் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். மீண்டும் நினைவுக்கு எடுத்து வருவோம்.

6  (படி)முறைகள் (6 Steps)
1.    முதலில் மேற்கோள் குறியை (Inverted commas) நீக்க வேண்டும்.

2.    இணைப்புச் சொல்லைப் (Conjunction) போட வேண்டும்.

3.    பிரதிப் பெயர்ச் சொல்லை (Pronoun) மாற்ற வேண்டும்.

4.    காலத்தை (Tense) மாற்ற வேண்டும்.

5.    காலமும் இடமும் சார்ந்த சொற்களை (Time and Place) மாற்ற வேண்டும்.

சில சொற்கள் நேர்க் கூற்றுக்குப் பொருத்த-மாகவும் அயற்கூற்றுக்குப் பொருத்தமில்லாத-தாகவும் இருக்கும். அவற்றை (நம் அட்டவணைக்கேற்ப) புதிய சொல்லாக மாற்ற வேண்டும்.

6.    ஆங்கில இலக்கண அமைப்புப்படி சொற்களை  இடமாற்றம் (Placement- மாற்றத்தை) செய்ய வேண்டும்.

இதுவரை முதல் மூன்று படிக்கள் (அடைப்புக்-குறி, இணைப்புச்சொல்,  பிரதிப் பெயர்ச் சொல்) மாற்றங்களைப் பார்த்து முடித்துள்ளோம்.

இப்போது  4ஆம் (படி) முறையைப் பார்ப்போம். 

காலங்கள் _ நிகழ் காலம், இறந்த காலம்,   எதிர்காலம் ஆகியவை எப்படி மாற்ற-மடைகின்றன என்பதைப் பார்ப்போம்.
காலங்களை (Tense) 3 வகையாகப் பார்த்தோமல்லவா? ஒவ்வொன்றின் உள் பிரிவுகள் 4 _ அதனால் மொத்தம் 4×3=12 வகைகள் அல்லவா?

நேர்க்கூற்றிலிருந்து அயற்கூற்றுக்கு மாற்றும்போது, அதில் ஏதாவது ஒரு காலம்  நிச்சயம் வரும். அதை எவ்வாறு மாற்றுவது என்பதைத் தான் இந்த இதழில் பார்க்கப் போகிறோம்.

1)    நிகழ் காலத்தில் இருந்தால், இறந்த காலமாக மாற்ற வேண்டும்.

2)    இறந்த காலமாக இருந்தால், இறந்தகால வினைமுற்றாக மாற்ற வேண்டும்.

3)    ஒருவேளை எதிர் காலமாக இருந்தால், எதிர்காலத்தைக் குறிக்கும் சொற்களான  will, shall
போன்ற சொற்களுக்கான past format ஆக… அதாவது would, should
போன்ற சொற்களாக மாற்ற வேண்டும்.

 

எ.கா.:
Water melon said to SweetLime, “I am cool” (Direct)

Water melon told SweetLime that it was cool (Indirect)

எ.கா.:
Sun said to Moon, “I shined bright” (Direct)
Sun told Moon that it had shined bright (Indirect)

எ.கா.:
Bi-cycle said to Motor-bike, “I will be useful to improve healthy body” (Direct)
Bi-cycle told Motor-bike that it would be useful to improve healthy body. (Indirect)

(சில தவிர்க்க முடியாத (விதி) விலக்குகள் உண்டு! அவற்றை இங்கே பார்ப்போம்).

பிஞ்சுகளே,
ஒரு வேளை ‘பேசுபவர் பகுதி’ நிகழ் காலத்தைக் குறிக்கும் என்று வைத்துக் கொள்வோம்.  அப்போது அடைப்புக் குறிக்குள் உள்ள நிகழ் காலத்தைக் குறிக்கும் சொல் (அல்லது சொற்கள்) மாற்றமடையாமல் நிகழ் காலமாகவே இருக்கும்.  
எ.கா.:
Weather Reporter says, “the cyclone remains near Chennai” (Direct)
Weather Reporter says that the cyclone remains near Chennai (Indirect)

இங்கே பாருங்கள் ‘உரையாடுபவர் பகுதி’ நிகழ் காலத்தில் இருப்பதால் பேசப்படுகிற ‘உரையாடலும்’  நிகழ் காலமாகத்தான் இருக்கும். அதனால் Tense மாறாமல் Present Tense-லேயே இருக்கும்.

 

தொடரும்…

28
நாணயங்கள் எங்கே உற்பத்தியாகின்றன?நாணயங்கள் எங்கே உற்பத்தியாகின்றன?31st May 2022
கணிதப் புதிர் சுடோகு1st June 2022கணிதப் புதிர் சுடோகு

மற்ற படைப்புகள்

2020_mar_v12
இலக்கணம்மார்ச் 2020
26th February 2020 by ஆசிரியர்

PREPOSITIONS – முன்னிடைச் சொற்கள் பயன்படுத்தும் முறை -11

Read More
2019_nov_v20
இலக்கணம்நவம்பர் 2019
29th October 2019 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்

Read More
2021_sep_v44
இலக்கணம்செப்டம்பர் 2021
3rd September 2021 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் – நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] – 26

Read More
2022_june_34
ஜூன் 2022பிஞ்சுகள் பக்கம்
3rd June 2022 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
இலக்கணம்எப்ரல் 2020
28th March 2020 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் – CONJUNCTION (இணைப்புச் சொல்)

Read More
இலக்கணம்ஜூன் 2022
31st May 2022 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p