தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்
நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] – 33
நேர்க் கூற்றிலிருந்து அயற்கூற்றுக்கு மா(ற்)றும் போது உரையாடலில் உள்ள சொற்களில் என்ன என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதை பாகம் (அத்தியாயம்)_26இல் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். மீண்டும் நினைவுக்கு எடுத்து வருவோம்.
6 (படி)முறைகள் (6 Steps)
1. முதலில் மேற்கோள் குறியை (Inverted commas) நீக்க வேண்டும்.
2. இணைப்புச் சொல்லைப் (Conjunction) போட வேண்டும்.
3. பிரதிப் பெயர்ச் சொல்லை (Pronoun) மாற்ற வேண்டும்.
4. காலத்தை (Tense) மாற்ற வேண்டும்.
5. காலமும் இடமும் சார்ந்த சொற்களை (Time and Place) மாற்ற வேண்டும்.
சில சொற்கள் நேர்க் கூற்றுக்குப் பொருத்த-மாகவும் அயற்கூற்றுக்குப் பொருத்தமில்லாத-தாகவும் இருக்கும். அவற்றை (நம் அட்டவணைக்கேற்ப) புதிய சொல்லாக மாற்ற வேண்டும்.
6. ஆங்கில இலக்கண அமைப்புப்படி சொற்களை இடமாற்றம் (Placement- மாற்றத்தை) செய்ய வேண்டும்.
இதுவரை முதல் மூன்று படிக்கள் (அடைப்புக்-குறி, இணைப்புச்சொல், பிரதிப் பெயர்ச் சொல்) மாற்றங்களைப் பார்த்து முடித்துள்ளோம்.
இப்போது 4ஆம் (படி) முறையைப் பார்ப்போம்.
காலங்கள் _ நிகழ் காலம், இறந்த காலம், எதிர்காலம் ஆகியவை எப்படி மாற்ற-மடைகின்றன என்பதைப் பார்ப்போம்.
காலங்களை (Tense) 3 வகையாகப் பார்த்தோமல்லவா? ஒவ்வொன்றின் உள் பிரிவுகள் 4 _ அதனால் மொத்தம் 4×3=12 வகைகள் அல்லவா?
நேர்க்கூற்றிலிருந்து அயற்கூற்றுக்கு மாற்றும்போது, அதில் ஏதாவது ஒரு காலம் நிச்சயம் வரும். அதை எவ்வாறு மாற்றுவது என்பதைத் தான் இந்த இதழில் பார்க்கப் போகிறோம்.
1) நிகழ் காலத்தில் இருந்தால், இறந்த காலமாக மாற்ற வேண்டும்.
2) இறந்த காலமாக இருந்தால், இறந்தகால வினைமுற்றாக மாற்ற வேண்டும்.
3) ஒருவேளை எதிர் காலமாக இருந்தால், எதிர்காலத்தைக் குறிக்கும் சொற்களான will, shall
போன்ற சொற்களுக்கான past format ஆக… அதாவது would, should
போன்ற சொற்களாக மாற்ற வேண்டும்.
எ.கா.:
Water melon said to SweetLime, “I am cool” (Direct)
Water melon told SweetLime that it was cool (Indirect)
எ.கா.:
Sun said to Moon, “I shined bright” (Direct)
Sun told Moon that it had shined bright (Indirect)
எ.கா.:
Bi-cycle said to Motor-bike, “I will be useful to improve healthy body” (Direct)
Bi-cycle told Motor-bike that it would be useful to improve healthy body. (Indirect)
(சில தவிர்க்க முடியாத (விதி) விலக்குகள் உண்டு! அவற்றை இங்கே பார்ப்போம்).
பிஞ்சுகளே,
ஒரு வேளை ‘பேசுபவர் பகுதி’ நிகழ் காலத்தைக் குறிக்கும் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அடைப்புக் குறிக்குள் உள்ள நிகழ் காலத்தைக் குறிக்கும் சொல் (அல்லது சொற்கள்) மாற்றமடையாமல் நிகழ் காலமாகவே இருக்கும்.
எ.கா.:
Weather Reporter says, “the cyclone remains near Chennai” (Direct)
Weather Reporter says that the cyclone remains near Chennai (Indirect)
இங்கே பாருங்கள் ‘உரையாடுபவர் பகுதி’ நிகழ் காலத்தில் இருப்பதால் பேசப்படுகிற ‘உரையாடலும்’ நிகழ் காலமாகத்தான் இருக்கும். அதனால் Tense மாறாமல் Present Tense-லேயே இருக்கும்.
தொடரும்…