மிக நீளமான தந்தம் கொண்ட யோகஸ்வரா
ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களைக் கொண்ட போகேஸ்வரா என்னும் யானை கருனாடகாவில் உள்ள பந்திப்பூர் வனப்பகுதியில் வயது மூப்பின் காரணமாக அண்மையில் உயிர் இழந்தது. அதற்கு வயது 60.
அதன் ஒரு தந்தம் 2.54 மீட்டர் நீளமும் மற்றொரு தந்தம் 2.34 மீட்டர் நீளமும் கொண்டது. இதனால் ஆசியாவிலேயே மிக நீண்ட தந்தங்களைக் கொண்ட யானை என்ற சிறப்பினைப் பெற்றது. சுற்றுலாப் பயணிகளையும் காட்டுயிர் ஆர்வலர்-களையும் வெகுவாகக் கவர்ந்ததால் வனத்துறை அதிகாரிகள் இதனை மிஸ்டர் கபினி என்று அழைத்து வந்தனர்.
இறந்த யானையின் உடலை உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தி அதன் இரண்டு தந்தங்களையும் வெட்டி எடுத்து மைசூர் வனத்துறை அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அதன் உடலை கபினி அணை அருகே குழிதோண்டிப் புதைத்து, வனத்துறை அதிகாரிகளும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இறுதி மரியாதை செலுத்தினர்.