• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

ரோபோ

2022_July_p5
ஜூலை 2022பாடல்கள்

திட்ட மிட்ட வகையிலே
தேர்ந்து செய்யப் பட்டவன்
இட்ட பணிகள் செய்திடும்
இரும்பு மனிதன் எந்திரன்

நாளை உலகில் எங்கணும்
நமக்குத் துணைவன் எந்திரன்
ஆலை வேலை செய்யவும்
அமைந்த நல்ல எந்திரன்

அரங்கம் தனிலும் ஆடுவான்
அழகு நடன எந்திரன்
சுரங்கம் தனிலும் வேலையைச்
சுழன்று செய்யும் எந்திரன்

மருத்துவத் துறையில் கூடத்தான்
சிறுத்த உடம்பு எந்திரன்
திருத்தமாக அறுவையைச்
சிறப்பாய்ச் செய்யும் எந்திரன்

அணுவுலை தன்னுள் சென்றுமே
ஆக்க வேலை செய்திடும்
மனிதத் தோழன் எந்திரன்
மகிழ்ச்சி அளிக்கும் எந்திரன்

தீயை அணைக்கும் துறையிலும்
திறமை காட்டும் எந்திரன்
தீய எண்ணம் சிறிதுமே
தன்னில் இல்லா எந்திரன்

மூழ்கி ஆழக் கடலிலே
முத்துக் குளிக்கும் எந்திரன்
ஆள்கள் செய்ய முடிந்திடா
அனைத்தும் செய்யும் எந்திரன்

திங்கள் செவ்வாய்க் கோள்களில்
தங்கி வேலை செய்திடும்
அங்கே ஆய்வு செய்ததை
அனுப்பி வைக்கும் எந்திரன்

வண்ணப் பொம்மை உருவிலே
வளைந்து நெளிந்து பாடியே
சின்னக் சின்னக் குழந்தையைச்
சிரிக்க வைக்கும் எந்திரன்

கேள்விக் குரிய பதில்களைக்
கேட்ட உடனே சொல்லிடும்
ஆழ்ந்த நுட்பச் செயலியின்
அறிவு கொண்ட எந்திரன்

அறிவியல் நுட்ப வளர்ச்சியால்
அடையப் பெற்ற எந்திரன்
அறியா மை நோய்க்கெலாம்
ஆட்ப டாத எந்திரன்.

– பெரு.இளங்கோ

25
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்5th July 2022
சமத்துவப் பாடம் நடத்திய மாணவர்6th July 2022சமத்துவப் பாடம் நடத்திய மாணவர்

மற்ற படைப்புகள்

2020_jul_v40
ஜூலை 2020பாடல்கள்
30th July 2020 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! செம்மொழியான தமிழ்மொழியாம்

Read More
2020_sep_v4
செப்டம்பர் 2020பாடல்கள்
29th September 2020 by ஆசிரியர்

விடுதலையைத் திராவிடர்க்கு நெய்தார்!

Read More
7
ஆகஸ்ட் 2023பாடல்கள்பிஞ்சு 2023
4th August 2023 by ஆசிரியர்

எங்கள் பள்ளிக்கூடம்

Read More
37
ஜனவரி 2024பாடல்கள்பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
8th January 2024 by ஆசிரியர்

பெரியார் தேர்ந்துரைத்த பொங்கல் திருநாள்!

Read More
2022_june_pinju-june-2022-pages-final-3544
ஜூன் 2022பாடல்கள்
3rd June 2022 by ஆசிரியர்

முதியோரை வாழ்த்துவோம்

Read More
2023_mar_1
பாடல்கள்மார்ச் 2023
1st March 2023 by ஆசிரியர்

குருவியும்… குரங்கும்…

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p