• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

அசத்தும் அறிவியல்: நெருப்பிலும் வெடிக்காத பலூன்

2022_August_10
அறிவியல்ஆகஸ்ட் 2022

ஊதிய பலூன்கள் எளிதில் உடையக்கூடியவை.  அவற்றை கூர்மையான பொருள்களிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். மேலும் தீப்பிழம்புகளில் இருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும். நெருப்பானது ரப்பரை இளக்கப்படுத்தி வெடிக்கச் செய்யலாம். இருப்பினும், பலூனை உடையாமல் நேரடியாக தீச்சுடரில் எவ்வாறு பிடிக்க முடியும் என்பதை இந்தச் சோதனையில் நாம் காணப் போகிறோம்.

தேவையான பொருள்கள் :

1.    காற்றால் நிரப்பப்பட்ட ஒரு பலூன்

2.    தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு பலூன்

3.    ஒரு மெழுகுவத்தி ஏற்றியது

4.    ஒரு பெரியவரின் உதவி

பரிசோதனையை எவ்வாறு செய்வது?

1.    ஒளிரும் மெழுகுவத்தியைத் தொட்டியில் வைக்கவும், இந்த வழியில் ஏதாவது நடந்தால், நீங்கள் குழாய் நீரைக் கொண்டு தீப்பிழம்பை எளிதாக அணைக்கலாம்.

2.    ஒரு பலூனை ஊதி, அதைக் கட்டவும். பின்னர் அதை ஒரு மெழுகுவத்தியின் சுடர் மீது காட்டவும். பலூனுக்கு என்ன நடக்கிறது?

3.    இப்போது ஒரு பலூனைத் தண்ணீரால் நிரப்பி, அதைக் கட்டவும். கவனமாக இருங்கள். இல்லாவிடில் நீங்கள் ஈரமாகக் கூடும்!

4.    இப்போது மெழுகுவத்தியின் சுடர் மீது தண்ணீர்  நிரப்பிய பலூனை பிடித்துக் கொள்ளுங்கள். என்ன நடக்கிறது?

அதன் பின்னால் உள்ள அறிவியல் என்ன?

தண்ணீர் இல்லாத பலூன் ஏன் தீப்பிழம்பில் உடைகிறது?

தீப்பிழம்பு தன்னில் வைக்கப்படும் அனைத்தையும் சூடாக்குகிறது. இது இரண்டு பலூன்களின் ரப்பரையும் சூடாக்குகிறது. தண்ணீர் இல்லாத பலூனின் ரப்பர் மிகவும் சூடாகி, பலூனுக்குள் காற்றின் அழுத்தத்தை எதிர்க்க முடியாத அளவுக்கு பலவீனமடைகிறது.

தண்ணீரைக் கொண்ட பலூன் தீப்பிழம்பில் உடைவதை எது தடுக்கிறது?

நீர் உள்ள பலூனைச் சுடர்களில் வைக்கும்போது, நீர் தீப்பிழம்பிலிருந்து பெரும்பாலான வெப்பத்தை உறிஞ்சுகிறது. எனவே, பலூனின் ரப்பர் மிகவும் சூடாக மாறாது. ரப்பர் சூடாகாததால், அது பலவீனமடைவதில்லை, எனவே, பலூன் உடையவில்லை. தீச்சுவாலைக்கு மேலே பலூனின் வெளிப்புறத்தில் புகை படிந்து கருப்பு நிறமாய் இருப்பதைக் கூட நீங்கள் காணலாம்.

நீர், வெப்பத்தை ஏற்கும் ஒரு நல்ல உறிஞ்சியாகும். நீரின் வெப்பநிலையை மாற்ற நிறைய வெப்பம் தேவைப்படுகிறது. 1 கிராம் இரும்பின் வெப்பநிலையை 10°C உயர்த்துவதை விட, 1 கிராம் நீரின் வெப்பநிலையை 10 °C உயர்த்துவதற்கு 10 மடங்கு அதிக வெப்பம் தேவைப்படுகிறது. அதனால்தான் ஒரு டீகெட்டில் தண்ணீரைக் கொதிநிலைக்குக் கொண்டு வர நீண்ட நேரம் ஆகும். மறுபுறம், நீர் குளிர்ச்சியடையும் போது, அது அதிக வெப்பத்தை வெளியிடுகிறது.

இதனால்தான் பெருங்கடல்களுக்கு அருகிலுள்ள பகுதிகள் அல்லது பிற பெரிய நீர்நிலைகள் குளிர்காலத்தில் அதே அட்சரேகையில் உள்ள பகுதிகளைப் போல குளிர்ச்சியடைவதில்லை.

25
சின்னக்கைச் சித்திரம்சின்னக்கைச் சித்திரம்2nd August 2022
எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!2nd August 2022

மற்ற படைப்புகள்

கணக்கும் இனிக்கும் (தொடர்)ஜூலை 2022பிஞ்சுகள் பக்கம்
21st July 2022 by சந்தோஷ்

உலக நாடுகள் : பிலிப்பைன்ஸ் (Philippines)

Read More
2020_nov_v9
அறிவியல்நவம்பர் 2020
15th November 2020 by ஆசிரியர்

அய்ன்ஸ்ரூலி – அறிவியல் படக்கதை : கண்ணாடி பிம்பம்

Read More
2022_feb_v18
அறிவியல்பிப்ரவரி 2022
4th February 2022 by ஆசிரியர்

பரிசு வேண்டுமா? – மரபணுவில் மாற்றம் ஏற்படுத்திய விண்வெளிப் பயணம்

Read More
2
அறிவியல்டிசம்பர் 2023
12th December 2023 by ஆசிரியர்

செயற்கை மூளை செய்தால் கணினி சிந்திக்குமா?

Read More
2023_mar_25
அறிவியல்மார்ச் 2023
2nd March 2023 by ஆசிரியர்

ஓர் எழுத்து பல பொருள்

Read More
2020_aug_v7
அறிவியல்ஆகஸ்ட் 2020
31st August 2020 by ஆசிரியர்

சராசரி நுண்ணறிவு விகிதம் (மினி) எவ்வளவு? அதை அதிகரிப்பது எப்படி? கணக்கிடுவது எப்படி?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p