பயங்கர ப்ப்பா ஆஆசம்
சமாதானத்து எழுதிய கடிதம்
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு நகரில் வசிக்கும் கிருஷ்ணபிரியா, கேரள அரசில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். ஆண்டுதோறும் பன்னாட்டு சகோதரர்கள் நாளன்று தவறாமல் தன் தம்பிகிருஷ்ண பிரசாத்துக்குத் தொலைப்பேசியில் வாழ்த்து சொல்வாராம். இந்த ஆண்டு வேலைப்பளு காரணமாக மே 24 சகோதரர் நாளன்று தொடர்புகொள்ள முடியவில்லையாம். இதனால் கிருஷ்ணபிரசாத் அக்காவுக்கு போன் செய்துள்ளார். அதையும் அக்காவால் எடுக்க முடியவில்லை. இதனால் கோபமடைந்த தம்பி, அவரது அக்காவிடம் பேசாததோடு, எண்ணை வாட்ஸ் அப்பில் பிளாக் செய்துவிட்டாராம்.
தம்பி கோபமாக இருப்பதை அறிந்த அக்கா தம்பியின் கோபத்தைத் தணிக்க மிக நீண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இருவரும் பிறந்தது, வளர்ந்தது, சண்டை, பாசம் என அனைத்தும் எழுதிட 12 மணி நேரம் ஆனதாம். பின்னர் அந்தக் கடிதப் பொட்டலத்தை தம்பி பிரசாத்துக்கு அனுப்பியுள்ளார். அந்தக் கடிதப் பொட்டலம் 5 கிலோ எடை கொண்டதாகவும், கடிதம் 434 மீட்டர் நீளம் கொண்டதாகவும் இருந்துள்ளது.”
இதைப்பார்த்த தம்பி பிரசாத், கோபம் தனிந்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள யுனிவர்சல் ரிக்கார்டு ஃபோரம் என்னும் நிறுவனத்துக்கு அக்கா தனக்கு எழுதிய கடிதத்தை அனுப்பியுள்ளார் இது உலகச் சாதனை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் அது விரைவில் இடம்பெறும் என இருவரும் எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.
இந்தப் பாசம் கொஞ்சம் அதிகமோ என்று தோன்றினாலும், அது கூட சாதனையாகி விட்டதே! பாசத்திற்கு என்ன அளவு என்று கேட்கிறீர்களா?