துணுக்குச்சீட்டு
அபி
உயரத்திலிருந்து ஒரு பூனை தடுமாறி, முதுகுப்பகுதி கீழ்நோக்கி இருக்குற மாதிரி விழுந்தாலும் அது சுழன்று பாதம் தரையில் படும்படி தான் விழும். அது எப்படி?
பூனையின் உடல் தலைகீழா இருந்தா அது அனிச்சையாக அந்தரத்தில் இருந்தாலும் சுழன்று சரியான நிலைக்கு அதன் உடலை மாத்திக்கும். இதனை (Righting Reflex) என்று சொல்லுவோம். இதுக்கு அதனுடைய காது மய்யப்புழை (Ear canal) தான் உதவுது. இந்த மய்யப்புழை உடல் சரியான சமநிலையில் இருக்குதா என்பதை அறியப் பயன்படுகிறது. இந்த ‘Righting Reflex’ ஸிமீயீறீமீஜ்’ஆல் தான் பூனை தலைகிழா விழுந்தாலும் கீழே தரையில் கால் படும்படிதான் விழுகிறது.
என்னதான் ‘Righting Reflex’ இருந்தாலும், எந்த உயரத்துல இருந்து விழுது என்பது உயிர் தப்பிப்பதில் முக்கிய பங்கா இருக்கு. உடனே அதிக உயரமான இடத்தில இருந்து விழக் கூடாதுன்னு தானே யோசிச்சீங்க. அதான் இல்லே, அதிக உயரமான இடத்தில இருந்து விழுந்தா தரையைத் தொடும் நேரம் அதிகமா இருக்கும். அப்போ சுலபமா உடம்பு எந்தக் கோணத்துல இருக்குன்னு தெரிஞ்சிக்க கால அவகாசம் அதிகமா இருக்கும். அதனால, பூனை உயிர் தப்பிப்பதற்கான வாய்ப்பு அதிகமா இருக்கும். ஹே! பூனை ஆனாலும் காத்துல நல்ல சர்க்கஸ் பண்ற ‘man’ நீ!
அவசரமா நடந்து போயிட்டு இருக்கும் போது ஒரு கதவுல முட்டிக்கையில் ஒரு குறிப்பிட்ட இடத்துல இடிச்சிகிட்டா ஜிவ்வுனு வலிக்கும். சாதாரணமாக உடம்பில் மத்த இடங்களில் இடிச்சிகிட்டா ஜிவ்வுனு வலிக்காது. ஆனா, முழங்கைல இடிச்சிகிட்டா மட்டும் ஏன் அப்படி வலிக்குது?
முழங்கையில ஒரு குறிப்பிட்ட இடத்துல இடிக்கும் போது நேரடியா எலும்புல இடிச்சிக்க மாட்டோம். மாறாக முன்கை நரம்புல (ஹிறீஸீணீக்ஷீ ழிமீக்ஷீஸ்மீ) இடிக்கும்போது, அந்த நரம்பு மேற்கை எலும்பில் போய் இடிக்கும். அதனாலதான் ஜிவ்வுனு இருக்கு. மேற்கை எலும்பு முழங்கைல ஆரம்பிச்சு தோள் வரைக்கும் இருக்குற எலும்பு இந்த முன்கை நரம்பு. நம்ம கைகள் செய்யும் ஒருசில வேலைகள் இந்த முன்கை நரம்பின் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்த முன்கை நரம்பை ஆங்கிலத்தில் ‘Ulnar Nerve’ என்றும், நரம்பாகவே இருந்தாலும் ‘Funny Bone’ என்றும் சொல்லுவாங்க.
கூடைப் பந்தாட்டம் விளையாடுவீங்களா? அப்போ சடார் சடார் என்று ஓடிப் போய் பந்தை இந்தக் கைக்கும் அந்தக் கைக்கும் மாற்றி மாற்றி இமைக்கும் நொடியிலே அந்தக் கூடையில் பந்தைப் போட்டுவிட்டுக் குதிப்பதே ஒரு தனி மகிழ்ச்சி அல்லவா!! அந்தக் கூடைப் பந்தில் இருக்கும் கருப்புக் கோடுகள் அழகுக்காகப் போடப்பட்டவையா?
அந்தக் கோடுகள் அழகுக்காகப் போடப்-பட்டவை இல்லைனு சொன்னா நம்ப முடியுதா? ஆமா, அந்தக் கோடுகள் விளையாட்டு வீரர்கள் நன்றாக மற்றும் சுலபமாக விளையாடப் போடப்பட்டவை. பொதுவா வழவழப்பா இருக்கும் கோள வடிவப் பொருள் ஒன்று வேகமாக ஒருவரை நோக்கி வரும்போது அதைப் பிடித்துக் கையாளுவது அவங்களுக்கு சற்றுக் கடினமா இருக்கும். ஆனால், அந்தப் பந்து சொரசொரப்பா இருந்தால் கையாளுவது சுலபமாக இருக்கும். அப்படி பிடித்து விளையாட ஏதுவாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் கூடைப் பந்து சொரசொரப்பாகவும் அதில் வரிப்பள்ளம் (கருப்புக் கோடுகள்) இருக்கும்படியும் வடிவமைக்கப் பட்டிருக்கின்றது. அப்பப்பா, ஒரு வரிப் பள்ளத்துல எவ்ளோ இருக்கு!