தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்
கே.பாண்டுரங்கன்
INFINIIVE, GERUND,PARTCIPLE
ஆங்கில இலக்கணச் சொற்களின் மொழியாக்கம் (Translation) தமிழ் இலக்கணச் சொற்களுடன் சில இடங்களில் மிகச் சரியாகப் பொருந்தாதது போல் தோன்றும். அதை நாம் நம் வசதிக்கேற்ப புரிந்துகொள்ளுதலே நலம்.
INFINITIVE = வினையெச்சம் (முடிவுறா வினைச் சொல்)
GERUND= தொழிற்பெயர் (Noun போல செயல்படும்)
PARTICIPLE = பெயரெச்சம் (Adjective / Adverb போல செயல்படும்)
கடந்த இதழில் சொன்னபடி,
நாம் மூன்று வகையான சொற்றொடர் சுருக்கிகளை மீண்டும் தெளிவான விளக்கங்களுடன் பார்ப்போமா?
முதலில் INFINITIVE, GERUND இரண்டை (மட்டும்) ஒப்பிட்டுப் பார்ப்போம்!
(PARTICIPLE- அய் பின்னர் ஒப்பிடுவோம்)
INFINITIVE, GERUND – இரண்டையும் எங்கே, எவ்வாறு பயன்படுத்துவது… என்பதற்காகத்தான் இந்த ஒப்பீடு.
இதில் நான்கு வகையான ஒப்பீடுகள் உண்டு.
முதல் வகை:
ஆங்கிலத்தில்…
Some verbs [need, want, desire, learn] are always followed by INFINITIVE
தமிழில்…
கீழ்க்காணும் அட்டவணையில் காணப்படும் சில வினைச்சொற்களைத்[need, want, desire, learn] தொடர்ந்து எப்போதும் முடிவுறா வினைச் சொல் (INFINITIVE) மட்டுமே வரும்.
(எ-கா.) அட்டவணையைப் பாருங்கள்!
இரண்டாம் வகை:
ஆங்கிலத்தில்…
Some verbs [enjoy, avoid, consider, imagine…] are always followed by GERUND
தமிழில்…
பின்வரும் அட்டவணையில் காணப்படும் சில (Verbs) வினைச்சொற்களைத் [enjoy, avoid, consider, imagine…] தொடர்ந்து GERUND மட்டுமே வரும்.
(எ-கா.) அட்டவணையைப் பாருங்கள்!
மூன்றாம் வகை:
ஆங்கிலத்தில்…
Some verbs [like, love, hate….] can be followed by INFINITIVE or GERUND without any change in meaning.
தமிழில்…
சில வினைச்சொற்களைத் [like, love, hate….] தொடர்ந்து INFINITIVE அல்லது GERUND- வரும்போது பொருள் (அர்த்தம்) மாறாது. ஒரே பொருளைக் குறிக்கும்.
(எ-கா.) அட்டவணையைப் பாருங்கள்!
மேற்கண்ட அட்டவணையில் INFINITIVE மற்றும் GERUND இரண்டுக்குமான எடுத்துக் காட்டுகளில் சொற்றொடர்களின் பொருள் மாறவில்லை. ஒரே பொருளைத்தான் தருகின்றன.
நான்காம் வகை:
ஆங்கிலத்தில்…
Some verbs [stop, remember, forget, regret…] can be followed by GERUND or INFINITIVE, But the meaning changes totally!
தமிழில்…
சில வினைச்சொற்களைத் [stop, remember, forget, regret] தொடர்ந்து INFINITIVE அல்லது GERUND – வரும்போது பொருள் முழுவதும் மாறி வேறு பொருள் (அர்த்தம்) தரும்!
தற்போது நடப்பதை அல்லது இனிமேல் நடப்பதைக் கூறும்போது வினைச் சொற்களைத் தொடர்ந்து INFINITIVE வரும்.
முன்பு நடந்ததை எடுத்துக் கூறும்போது மேற்சொல்லப்பட்ட வினைச் சொற்களைத் தொடர்ந்து GERUND வரும்.