• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்-38

இலக்கணம்டிசம்பர் 2022

கே.பாண்டுரங்கன்

INFINITIVE, GERUND, PARTICIPLE

மின்னல் என்பது மேகங்களின் உராய்வால் ஏற்படுவது. அது அளவிட முடியாத அளவிற்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யும். அந்த மின்சாரத்தைப் பயனுக்குக் கொண்டுவர முடிந்தால் நமக்கு மின்சாரத் தட்டுப்பாடே வராது அல்லவா?

பல்லாயிரம் (வோல்ட்) அளவு மின்சாரம் கொண்ட மின்னல் போன்றதுதான் தமிழ் மொழி. இந்த மின்னல் கொல்லும் மின்னல் அல்ல; வெல்லும் மின்னல்– _ நமக்கு அறிவு ஒளியைக் கொடுக்கும் மின்னல்!

‘தமிழ் மொழி’யின் மின்னொளியை ‘ஆங்கில இலக்கணம்’ அறியப் பயன்படுத்துவோம்.

ஆங்கிலத்தில் விரிவான சொற்றொடர்களை சுருக்கிச் சொல்லுவதற்கு அல்லது சுருக்கி எழுதுவதற்காக INFINITIVE, GERUND, PARTICIPLE
போன்ற வழிமுறைகளைப் (procedures) பயன்-படுத்துகிறோம்.

INFINITIVE = வினையெச்சம் (முடிவுறா வினைச்சொல்)
GERUND = தொழிற்பெயர் (Noun போல செயல்படும்)
PARTICIPLE = பெயரெச்சம் (Adjective/Adverb போல செயல்படும்)

1. INFINITIVE (வினையெச்சம்)

“INFINITE’  என்பதை To Infinitive’ என்றும் சொல்லலாம். இதன் பொருள் முடிவுறா வினைச்சொல்  அதாவது வினையெச்சம் எனலாம்.
“to + verb”

பொதுவாக“to” வும், ஒரு “verb” ம் சேர்ந்து வந்தால் அது “Infinite” அல்லது ‘To Infinitive’  என்பதாகும்.

To go (போவதற்கு)
To come  (வருவதற்கு)
To connect  (இணைப்பதற்கு)
என்றவாறு வருபவை.

சொற்றொடர் எ.கா.
I want to go to the book exhibition
நான் புத்தகக் காட்சிக்குப் போக விரும்புகிறேன்.
He encourages to speak mother tonque (language).
அவர் தாய் மொழியைப் பேச ஊக்கமளிக்கிறார்.

2.GERUND ((தொழிற்பெயர்)
ஆங்கிலத்தில்…

Gerund is nothing but ‘ing’ form of a verb which behaves a like NOUN. So it is called Verbal- noun

தமிழில்….
(Verb) வினைச்சொல் போன்ற ஒரு தோற்றத்தையும் (Noun) பெயர்ச் சொல்லைப் போன்ற பயன்பாட்டையும் தரும் சொல்லைத் தான் Gerund என்று ஆங்கிலத்தில் சொல்கிறோம். எனவே Gerund என்பதற்கு நம் வசதிக்கேற்றவாறு தொழிற்பெயர் என்று பெயரிட்டுக்கொள்வோம்.
Drinking (குடித்தல்)
Washing (துவைத்தல்)
Wishing (வாழ்த்துதல்)
என்றவாறு வருபவை.

சொற்றொடர் எ.கா.
Swimming is a very good exercise.
நீந்துதல் என்பது மிகச் சிறந்த பயிற்சி.

Trying for a big position is good.
உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்று முயற்சித்தல் மிக நல்லது.

3. PARTICIPLE (பெயரெச்சம்)
ஆங்கிலத்தில்…
PARTICIPLE is nothing but ‘ing’ form of a verb which behaves an Adjective/Adverb on a subject
தமிழில்…
PARTICIPLE   என்றால் பெயரெச்சம் (பண்புச்சொல் அல்லது உரிச்சொல் போலச் செயல்படும்)
Present Participle (நிகழ் காலப் பெயரெச்சம்): “verb + ing”
Ex. Writing, going, playing

Past Participle  (இறந்த காலப் பெயரெச்சம்): ஜிமீஸீsமீ பகுதியில் பயன்படுத்தும் எச்சவினை (மூன்றாவதாக வருவது)

Ex.Written, gone, played

Leaving(கிளம்புகின்ற)
Trying  (முயலுகின்ற)
Taking (எடுக்கின்ற)
Written (எழுதப்பட்ட)
Forshaken(கைவிடப்பட்ட)

சொற்றொடர் எ.கா.

Drinking Juice in the raining time, he will be affected by cold.

மழை நேரத்தில் பழச்சாறு அருந்துகிற அவருக்கு சளி பிடிக்கும் வாய்ப்பு அதிகம்

Broken glass was attached.

உடைக்கப்பட்ட கண்ணாடி ஒட்டவைக்கப்-பட்டது.

Infinitive, Gerund, Participle -_ இந்த மூன்றையும் வரும் இதழ்களில் இன்னும் விரிவாக தகுந்த சொற்றொடர் அமைப்புகள் மற்றும் எடுக்காட்டுகளுடன் பார்ப்போம்.
– தொடரும்

 

17
கணக்கும் இனிக்கும்கணக்கும் இனிக்கும்5th December 2022
தந்தை பெரியார் வேடமிட்டு அழகு மொழியில் உரை6th December 2022தந்தை பெரியார் வேடமிட்டு அழகு மொழியில் உரை

மற்ற படைப்புகள்

2022_dec_1
டிசம்பர் 2022பாடல்கள்
5th December 2022 by ஆசிரியர்

உழவரை மதிப்போம்!

Read More
2020_may_v38
இலக்கணம்மே 2020
9th May 2020 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் – மூன்று வகை இணைப்புச்சொற்கள் [ 3 TYPES OF CONJUCTION]

Read More
இலக்கணம்ஜூன் 2022
31st May 2022 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்

Read More
2020_aug_v42
ஆகஸ்ட் 2020இலக்கணம்
1st September 2020 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சிவை அறிவோம் : வினை உரிச் சொற்கள் [ADVERBS] – 16

Read More
2022_dec_33
அறிவியல்டிசம்பர் 2022
5th December 2022 by ஆசிரியர்

துணுக்குச்சீட்டு

Read More
2022_dec_6
அறிவியல்கணக்கும் இனிக்கும் (தொடர்)டிசம்பர் 2022
5th December 2022 by ஆசிரியர்

கணக்கும் இனிக்கும்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p