கணக்கும் இனிக்கும்: பெரிய்ய்ய் எண்கள்
“உனக்குத் தெரிந்த மிகப் பெரிய எண் எது?” என்று நான்கு வயது குழந்தையிடம் கேட்டபோது, ‘104’ என்றது.
“நூற்றுப்பத்து தெரியுமா?”
“110?… ஆமா தெரியுமே.”
“அப்ப அதை ஏன் சொல்லல?” என்ற போது,
“எனக்கு 110 தெரியும்; ஆனா 104தான் பெரிய எண்” என்றது.
ஆரம்பத்தில் நமக்கு 1-10 வரையில் சொல்லிக் கொடுத்து இருப்பார்கள். பின்னர் 11-20, மெதுவாக 21-50, அப்படியே தொடர்ந்து நூறு, ஆயிரம், பத்தாயிரம், லட்சம், கோடி என சொல்லிக் கொடுத்திருப்பார்கள். உங்களுக்குத் தெரிந்த பெரிய எண் எது? கடகடவென 9இல் ஆரம்பித்து பக்கத்தில் 9 போட்டுக் கொண்டே செல்வீர்கள் தானே?
1 – ஒன்று
10 – பத்து
100 – நூறு
1000 – ஆயிரம்
10000 – பத்தாயிரம்
1,00,000 – லட்சம்
10,00,000 – பத்துலட்சம் (மில்லியன்)
1,00,00,000 – கோடி
எங்கே எல்லாம் அன்றாட வாழ்வில் இத்தனை பெரிய எண்களைக் கேள்விப்பட்டு இருப்போம்? இதெல்லாம் உண்மையில் தேவையா? கோடி ரூபாய் பணம்?
நமது நாட்டின் மக்கள் தொகை சுமார் 140 கோடி (2021ஆம் ஆண்டு) மனித உடலில் இருக்கும் செல்களின் எண்ணிக்கை 3.72 ஙீ 1013
இதென்ன 10க்குப் பக்கத்தில் 13 என்று எழுதி இருக்கு? அதுவும் மேல எழுதி இருக்கு? அப்படின்னா 13 முறை 10யை பெருக்கணும். எவ்ளோ வரும்?
3.72 X 10 X 10 X 10 X 10 X 10 X 10 X 10 X 10 X 10 X 10 X 10 X 10 X 10
= 3.72 X 10000000000000
= 37200000000000
இவ்ளோ பெருசா எழுத முடியாதுன்னு தான் 3.72 X 1013 இப்படி எழுதறோம்.
முன்னர் இந்திய மக்கள் தொகை 140 கோடின்னு சொன்னோம். இதனை எப்படிக் குறிப்பிடுவது?
140 X 1,00,00,000
= 1.40 X 1000000000 = 1.40 X 109
இந்திய மக்கள் தொகையே இவ்வளவு இருக்குதுன்னா உலக மக்கள் தொகை… எம்மாடியோவ்! இதுநாளுக்கு நாள், ஏன் விநாடிக்கு விநாடி அதிகரிச்சிட்டே இருக்கு? ஒவ்வொரு நொடிக்கும் குழந்தைகள் பிறந்துக்கிட்டே இருக்கு. நொடின்னு சொன்னதும் இன்றொன்று நினைவுக்கு வருது. ஓர் ஆண்டில் எத்தனை நொடிகள் இருக்கும்?
ஓர் ஆண்டில் 365 நாட்கள், ஒரு நாளுக்கு 24 மணிநேரம், ஒரு மணிக்கு 60 நிமிடங்கள், ஒரு நிமிடத்திற்கு 60 விநாடிகள்.
இப்ப சொல்லுங்கள், எத்தனை விநாடிகள் இருக்கும்?
= 365 X 24 X 60 X 60
= 31,536,000
= 3.1536 X 107
நம்ம வயசு 10 என்றால் ஒரு 10அய் பெருக்கிக்கலாம். அப்ப, பத்து வயது குழந்தை இது வரையில் 3.1536 X 108 நொடிகள் வாழ்ந்திருக்கும்.
நமக்கே இவ்வளவு நொடிகள் வருதே, அப்ப நம்ம பெற்றோருக்கு? அதைவிட பெருசான்னா… கட்டிடங்கள்? ஏரி? குளம்? பூமி?
பூமிக்கு என்ன வயசு இருக்கும்? அது எத்தனை நொடிகள் பார்த்திருக்கும்?
பூமியின் வயதை 4.54 X 109 ஆண்டுகள் என்று கணக்கிடுகின்றார்கள். அப்ப நம்ம நொடி கணக்குக்கு என்ன செய்ய வேண்டும்? இரண்டையும் பெருக்கணும். ஒரு சாக்லேட் விலை 10 ரூபான்னா, 5 சாக்லேட் விலையைக் கண்டுபிடிக்க என்ன செய்வோம்?
10 + 10 + 10 + 10 + 10 = 10 X 5 அப்படின்னா பூமி பார்த்துள்ள நொடிகள்
= (3.1536 X 107) X (4.54 X 109)
~ 14.31 X 1016 = 1.43 X 1017
(இதுவரைக்கும் = ன்னு போட்டுகிட்டு இருந்தோம். இப்ப என்ன திடீர்னு ‘~’ன்னு போடுகின்றோம். ‘~’அப்படின்னா தோராயமாகன்னு அர்த்தம். பெரிய எண்கள் வரும்போது இப்படி தோராயக் கணக்கு போடுவோம். ரொம்ப குறிப்பிட்டுச் சொல்லத் தேவையில்லை.
பூமி பார்த்துள்ள நொடிகள் 43 X 1017 நொடிகள்
அதாவது 14300000,00000,00000 நொடிகள்