உலகு சூழ் ஆழி
ஆர்க்டிக் பெருங்கடல்:- ஆர்க்டிக் பெருங்கடல் உலகில் உள்ள மிகக் குளிர் நிறைந்த இடங்களில் ஒன்று. அது அய்ரோப்பாவின் வடபகுதியாலும் ஆசியா, வட அமெரிக்கா கீரீன்லாந்து ஆகிய பகுதிகளினாலும் சூழப்பட்டுள்ளது. இப்பெருங்கடல் பகுதி கனிப்பொருள்களாலும் உயிரினங்களாலும் நிறைந்தது. சில மக்களும் இங்கு வாழ்கின்றனர். கோடைக்காலத்தில் பனிக்கட்டிகளை உடைத்து ஆசியா, வட அமெரிக்கா கடற்கரை ஓரங்களில் கப்பல்கள் செல்லும்.
இயற்கைக் கூறுகள்:-
உலகில் உள்ள பெருங்கடல்களில் சிறிய, ஆழம் குறைவான பெருங்கடல் இது. பெரும்பாலான பகுதியில் 2 மீ உயரத்திற்கு உறைபனி மிதக்கும். இப்பெருங்கடலின் நடுவே வடதுருவம் உள்ளது. இதன் பரப்பு 1,40,89,600 சதுர கி.மீ. சராசரி ஆழம் 1,330 மீ. (4,360 அடி). சராசரி மேலே படிந்துள்ள பனிப்படிவத்தின் திண்மை 1.5 _ 3 மீ (4.9 _9.8 அடி). மிகக் குறைவான வெப்பம் – 700நீ (-940யீ). கிரீன்லாந்து வடமுனையில் பெரிய பனிப்பாறைகள் உடைந்து கிரீன்லாந்திற்குத் தெற்கே வடஅட்லாண்டிக் கடலில் சென்றடைகின்றன. அவைகளில் சில 120 மீ (400 அடி) கடல் மட்டத்திற்கு உயரமானவை. அவற்றின் சிறு பகுதியே கடல் நீருக்கு மேல் தெரிவதால் அவை கப்பலுக்கு ஆபத்தை உண்டாக்கும்.
வடக்கில் ஒளி:-
இருண்ட இரவுகளில் ஒளி மிக்க பல வண்ணங்கள் கொண்ட வைகறை ஒளியைப் (Aurora) பார்க்கலாம். அது பனிக்காலத்து இடையில் மிக்க ஒளியுடன் தெரியும். ஏனெனில், அப்பருவத்தில் அங்கே சூரியன் உதிக்காது. அவ்வொளி 24 மணி நேரமும் சூரியன் ஒளி வீசும் கோடைக்காலத்தில் தெரியாது.
ஆர்க்டிக் மக்கள்:-
இங்கு 8 இலட்சம் பூர்வ குடிகள் வாழ்கின்றனர். தற்போது அவர்கள் நாடோடி வாழ்க்கையை விட்டு சிற்றூர்களில் வாழ்கின்றனர். இங்கு தெற்கே இருந்து வந்த ஆயிரக்கணக்கான பொறியியலாளர்களும், வியாபாரிகளும் பணியாற்றுகின்றனர்.
கிரீன்லாந்து:-
கிரீன்லாந்து தன் ஆளுமை பெற்ற டென்மார்க்கின் ஒரு பகுதி. இந்நிலத்தில் தென்மேற்குக் கடற்கரையில் பெருமளவு மக்கள் வாழ்கின்றனர். காரணம், மக்கள் வாழ்வதற்கேற்ற தட்பவெப்ப நிலை அங்கு நிலவுகிறது. கிரீன்லாந்து உலகிலேயே மிகப்பெரிய தீவு ஆகும். தலைநகரம் – நவக் (Nuuk) பரப்பு – 21,75,600 சதுர கி.மீ. மக்கள் தொகை – 56,569. பேசும் மொழிகள் – டேனிஷ், கிரீன்லாந்து மொழி. நாணயம் – டேனிஷ் குரோன் (krone