பரிசு பெற்றுத்தந்த பெரியார் பிஞ்சு
எனக்குப் பிடித்த புத்தகம்
திருவாரூரில் நடைபெற்ற புத்தகக்காட்சியில், பெரியார் பிஞ்சு வெளியீடான உங்கா சிங்கா மங்கா புத்தகத்தைப் பற்றி கட்டுரை எழுதி பரிசு பெற்றுள்ளார் திருவாரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி ச.ராஜமுகி அவரது கட்டுரையிலிருந்து சில பகுதிகள்…
“ஒரு மனிதனை நெறிப்படுத்தவும் முறைப் படுத்தவும் நல்ல நண்பர்கள் புத்தகங்களே! ஒரு புத்தகத்தைப் படிப்பது ஒரு புதிய நண்பனைப் பெறுவது போன்ற இனிய அனுபவம்!
எனக்கு மிகவும் பிடித்த புத்தகம்: “உங்கா சிங்கா மங்கா” சிறுகதை, புகைப்படம், சிறார் நூல்கள் என்று பல தளங்களில் தீவரமாகச் செயல்படுகிறார். எழுத்தாளர்: விழியன். குழந்தைகளுக்காகத் தொடர்ந்து களப்பணி ஆற்றுபவர்.
கதைகளின் கதை: “உங்கா சிங்கா மங்கா” 10 கதைகளைக் கொண்ட தொகுப்பு. பொங்கல் ராட்டினம் கதை அன்பையும் அக்கறையையும் சொல்கிறது. சர்வகடல் புத்தகக் கண்காட்சிக்குச் சென்ற லோலிமாவின் புத்தக ஆர்வமும் அதற்குக் கிடைத்த பரிசும் நம் உள்ளத்தைக் குதூகலப்படுத்தும். அன்பும் இரக்கமும் தேவைகள், ஆடம்பரங்கள் அல்ல. அவை இன்றி மனித இனம் வாழாது என்ற தலாய்லாமா சொல்லை மெய்பிக்கும் வகையில் விலங்குகள் சேர்ந்து மனிதரைக் காப்பதைச் சொல்லும் விலங்கிதம் கதை. உணவுகளை வீண் செய்யாமல் சாப்பிட வேண்டும். ஆரோக்கியம் தரும் பச்சைக் காய்களைச் சாப்பிட வேண்டும் என்ற அறிவுரையை மூக்கோசி, பூமய்யா கதைகள் மூலம் விளக்குவார். அன்பு, கருணை, கனவு, கற்பனை, நட்பு, பாசம், மனித நேயம் எனப் பல உணர்வுகளின் கலவையாக கதைகள் இருக்கும். எனக்கு மிகவும் பிடித்த கதை உங்கா சிங்கா மங்கா. மூன்று முயல்கள் உணவு டாப்பாவை மாற்றி மாற்றிப் பிடித்து உணவைச் சாப்பிடுவது மிகவும் சிரிப்பாக இருந்தது.” என்று எழுதியுள்ளார்.
இப்புத்தகத்தை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள் என்று அவரிடம் கேட்டபோது, “எனக்கு கட்டுரை எழுதுவது ரொம்பப் பிடிக்கும். பெரியார் பிஞ்சு வெளியீடுகளிலேயே எனக்கு பிடிச்ச கதை உங்கா, சிங்கா, மங்கா. மூன்று முயல் உணவுப் பெட்டகத்தை மாற்றி மாற்றிக் குறும்பு செய்யும்; எனக்கு அந்தக் கதை ரொம்பப் பிடிக்கும். விழியன் சார் எழுதுன மியாம்போ என்ற கதையை நான் திருவாரூரில் நடந்த புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன்.
எனக்கு அப்ப கையில வீக்கம் இருந்தது. அதனால என்னால எழுத சிரமமாக இருந்தது. ஆனாலும் நான் அதைப் பற்றி எழுதினேன். பரிசு பெற்று என்னோட அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நான் பெருமையைச் சேர்த்தேன். “ என்று மகிழ்ந்தார்.
மாணவி ராஜமுகியைக் கட்டுரை எழுத ஊக்குவித்த ஆசிரியர் பு.பிரியங்கா அவர்களும் 5+ குழந்தைகளுக்கான சிறார் கதைகள் கொண்ட நூல். இந்நூல் கண் கவர் வண்ணங்களுடன் அழகிய ஓவியங்களுடனும் எல்லோரையும் ஈர்க்கும் வகையில் உள்ளது. கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் பெயர் ஒவ்வொன்றும் வித்தியாசமாக அழகியலுடன் இருக்கிறது. என்று தன் ரசனையை வெளிப்படுத்தினார்.<